“கட்சி என்றால் கோஷ்டி இருக்கத்தான் செய்யும்” – ராமதாஸ்

Published On:

| By Selvam

Ramadoss says every party has some tussle

“கட்சி என்றால் சில கோஷ்டி இருக்கத்தான் செய்யும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (மே 25) தெரிவித்துள்ளார். Ramadoss says every party has some tussle

சமூக முன்னேற்ற சங்கத்தின் கலந்தாய்வுக் கூட்டம் திண்டிவனத்தில் இன்று (மே 25) பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, சமூக முன்னேற்ற சங்கத் தலைவர் சிவப்பிரகாசம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
Ramadoss says every party has some tussle

இந்த கூட்டத்தில் ராமதாஸ் பேசும்போது,

“பாமகவை தொடங்குவதற்கு முன்பாகவே சமூக முன்னேற்ற சங்கத்தை 1988-ஆம் ஆண்டு தொடங்கினேன். எனக்கு ஒரு வேலை கிடைத்தது. நான், என் குடும்பம் என்று இல்லாமல் நான் சார்ந்த சமுதாயத்தை முன்னேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் சமூக முன்னேற்ற சங்கம் அமைப்பு தொடங்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்த அமைப்பு நாளும் வளர்ந்திருக்கிறது. இந்த சமூகத்தின் நிலை மாறி, மாவட்ட ஆட்சியராக, டாக்டர்களாக, வழக்கறிஞர்களாக, காவல்துறை அதிகாரிகளாக வளர்ந்திருக்கிறார்கள். சமூக முன்னேற்ற சங்கத்தின் பயிற்சியும் வழிகாட்டுதலும் தான் இதற்கு காரணம்.

பொதுவாக கட்சி என்றால் சில கோஷ்டி இருக்கத்தான் செய்யும். ஆனால், சங்கம் என்பது அனைவரும் ஒன்று சேருவதாகவும். அதனால், இந்த அமைப்பு சங்கம் போன்றது.

ADVERTISEMENT

இந்த சங்கத்தில் படித்தவர்கள், வேலைக்கு சென்றவர்கள், தொழிலதிபர்கள் சேரலாம். இது முன்னேறிய சமுதாயம் அல்ல. மிக மிக பின் தங்கிய சமுதாயம். எனவே, இந்த சமுதாயத்தை முன்னேற்ற இந்த அமைப்பு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. Ramadoss says every party has some tussle

Ramadoss says every party has some tussle

ஒவ்வொரு கிராமங்களிலும் பயிற்சி மையங்களை நிறுவி, சனி, ஞாயிறு அல்லது மற்ற நாட்கள் மாலை நேரங்களில் மாணவர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி கொடுக்க வேண்டும். சமூக முன்னேற்ற சங்கம் பயிற்சி கொடுத்ததால் ஒவ்வொரு கிராமத்திலும் விஏஓ, காவல்துறை அதிகாரிகளாக மாறியிருக்கிறார்கள் என்று நாம் பெருமையோடு சொல்ல வேண்டும்” என்றார் ராமதாஸ். Ramadoss says every party has some tussle

கடந்த சில நாட்களாக ராமதாஸ், அவரது மகனும் பாமக தலைவருமான அன்புமணி இடையே மோதல் போக்கு நிலவிவரும் நிலையில், கட்சி என்றால் சில கோஷ்டி இருக்கத்தான் செய்யும் என்ற ராமதாஸின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share