ஆர்சிபி இப்படி செய்யக்கூடாது: அட்வைஸ் சொன்ன அம்பத்தி ராயுடு

Published On:

| By Selvam

டி20 கோப்பை இறுதிப்போட்டியானது சென்னையில் மே 26-ஆம் தேதி நடைபெற உள்ளது.

முன்னதாக நேற்று (மே 25) நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 8 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்களை குவித்தது. அடுத்ததாக களமிறங்கிய ராஜஸ்தான் அணி, 19-ஆவது ஓவரில் 174 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

இதுகுறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் பேசிய சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு, “ஆக்கிரோஷமான கொண்டாட்டத்தால் ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியாது என்பதை பெங்களூரு அணி வீரர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெறுவதால் மட்டுமே உங்களால் கோப்பையை வெல்ல முடியாது. அணியின் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே, பிளேஆஃப் சுற்றில் வெல்ல முடியும்.

இந்திய வீரர்கள் மற்றும் உள்ளூர் பயிற்சியாளர்களுக்கு பெங்களூரு அணி நிர்வாகம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஐபிஎல் போட்டிகளில் இந்திய அணி வீரர்களின் திறமையை நீங்கள் புறக்கணிக்க முடியாது.

சென்னை, மும்பை, கொல்கத்தா அணிகள் இந்திய அணி வீரர்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவர்களை அணியில் சேர்த்திருக்கிறார்கள். அதனால் இந்த அணியில் இடம்பெற்றுள்ள இந்திய அணி வீரர்கள் நல்ல பெர்மாமன்ஸ் செய்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக சென்னை – பெங்களூரு அணிகள் மோதிய போட்டியில், சென்னை அணியை வீழ்த்தி பெங்களூரு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. அப்போது, போட்டி முடிந்த பின்பு பெங்களூரு அணி வீரர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் மைதானத்தைச் சுற்றி வந்தனர்.

இதனையடுத்து ஆர்சிபி வீரர்களுடன் தோனி கைகுலுக்காமல் சென்றது விமர்சனத்திற்குள்ளானது. இதுதொடர்பாக ஹர்ஷா போகலே போன்ற விமர்சகர்கள், “எதிரணி வீரர்களுடன் கைகுலுக்கிய பிறகே வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட வேண்டும்” என்று கருத்து தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

குட் நியூஸ்: தமிழகத்தில் கூகுள் பிக்சல் என்ட்ரி!

முதல்வரை ஒருமையில் பேசலாமா? – சவுக்கு சங்கருக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share