அஜித்குமார் லாக்கப் மரணம்- கைது செய்யப்பட்ட 5 போலீசார் சிறையிலடைப்பு!

Published On:

| By Minnambalam Desk

Ajithkumar Lockup death Case

சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தைச் சேர்ந்த அஜித்குமார் என்ற இளைஞர் காவல்துறை விசாரணையின் போது உயிரிழந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 5 போலீசாரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். Ajithkumar Lock-Up Death Case

சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தைச் சேர்ந்த கோவில் காவலாளி அஜித்குமார், நகை திருடியதாக குற்றம்சாட்டப்பட்டு சந்தேகத்தின் பேரில் திருப்புவனம் காவல் நிலையத்தில் போலீசாரால் கடுமையாக விசாரிக்கப்பட்டார். இந்த விசாரணையின் போது அஜித்குமார் மரணமடைந்தார்.

இதனையடுத்து அஜித்குமார் மரணத்துக்கு காரணமானவர்கள் என கூறப்பட்ட 6 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ஆனால் இந்த 6 போலீசாரையும் கைது செய்து கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சியினர் வலியுறுத்தினர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில் ஜூன் 30-ந் தேதி இரவு, அஜித்குமார் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில் அஜித்குமார் மரணத்துக்கு காரணமான 5 போலீசார் கைது செய்யப்பட்டனர். மேலும் போலீசார் மீது கொலை வழக்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அஜித்குமார் லாக்கப் மரண வழக்கில் கைது செய்யப்பட்ட 5 போலீசாரும் திருப்புவனம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, 5 போலீசாரையும் 15 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் 5 போலீசாரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share