ADVERTISEMENT

சுற்றும் ஐ.டி.ஆர் வெப்சைட் : வருமான வரி தாக்கலுக்கு கால அவகாசம் நீட்டிப்பா?

Published On:

| By Kavi

வருமான வரி தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்படவில்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது.

2024 – 2025 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கடந்த ஜூலை 31ஆம் தேதியுடன் அவகாசம் முடிவடைய இருந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவகாசத்தை செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டித்தது.

ADVERTISEMENT

இந்நிலையில் இன்றுடன் வருமான வரி தாக்கல் செய்ய கால அவகாசம் நிறைவடைகிறது. இன்னும் சில மணி நேரமே இருப்பதால், பலரும் ஒரே சமயத்தில் ஐ.டி.ஆர் ஃபைல் செய்ய முயற்சித்து வருகின்றனர்.

ஆனால் https://eportal.incometax.gov.in/iec/foservices/#/login வருமான வரித்துறை ஈ-போர்ட்டல் கோளாறு காரணமாக பலரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். இந்தசூழலில் காலக்கெடு எதுவும் நீட்டிக்கப்படவில்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது.

ADVERTISEMENT

ஏற்கனவே செப்டம்பர் 30 வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக ஒரு தகவல் பரவிய நிலையில் அதுபோன்று கால அவகாசம் எதும் நீட்டிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ள மத்திய அரசு இதுவரை 7 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ளனர். 2025-26 ஆம் ஆண்டுக்கான ஐடிஆர் தாக்கல் செய்யாத அனைவரும் இன்றே தாக்கல் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share