ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் டிரைவர் ஜமுனா

Published On:

| By Balaji

தான் நடிக்கும் கதாபாத்திரங்கள் மூலம் தன்னை அழகுபடுத்திக் கொள்ளும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் இவர் வத்திக்குச்சி’ படத்தின் இயக்குநர் கின்ஸ்லின் இயக்கவுள்ள டிரைவர் ஜமுனா” படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்தப் படத்தை 18 ரீல்ஸ் நிறுவனத்தின் சார்பாக,பிரபல குழந்தைகள் நல மருத்துவரும், முன்னணி தயாரிப்பாளரான எஸ்.பி.செளத்ரி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று மூன்று மொழிகளில் தயாரிக்கின்றார். இந்தப் படத்தின் கதையைக் கேட்ட ஐஸ்வர்யா ராஜேஷ், உடனடியாக இதில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டதாக கூறினார் தயாரிப்பாளர் எஸ்.பி.சௌத்திரி.

‘டிரைவர் ஜமுனா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். கிரைம் த்ரில்லர் பாணியில் இந்தப் படம் உருவாகவுள்ளது. இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் கால் டாக்ஸி டிரைவராக நடிக்கிறார். படத்தின் ஒளிப்பதிவாளராக கோகுல் பினாய், சண்டைக் காட்சிகளுக்கு அனல் அரசு, எடிட்டராக ‘அசுரன்’ எடிட்டர் ஆர்.ராமர் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

இன்றைய கால கட்டத்தில் தினசரி வாழ்க்கையில் கால் டாக்ஸி டிரைவர்களை கடந்து போய் வருகிறோம். ஒரு நடுத்தர குடும்பத்து, பெண் கால் டாக்ஸி டிரைவரை மையமாக கொண்ட கிரைம் திரில்லர் கதை என்பதை மட்டும் படக்குழு தெரிவித்து உள்ளது.

இராமானுஜம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share