அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாணவர்களின் கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்துள்ளார்.
சென்னையில் இன்று பிப்ரவரி 4-ந் தேதி அதிமுகவின் 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
அதிமுகவின் 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்:
- முதியோர் ஓய்வூதியம் ரூ2,000 ஆக உயர்த்தப்படும்
- மாணவர்களின் கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யபடும்
- மாணவர்களின் கல்விக் கடனை அரசே ஏற்கும்
- ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும்
- ஜல்லிக்கட்டில் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் வழங்கப்படும்.
- அரசு அங்கீகரிக்கும் இடத்தில் ஜல்லிக்கட்டு நடத்த ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்படும்.
- மாற்றுத் திறனாளிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடகள் தள்ளுபடி செய்யப்படும்.
- மகளிர் சுய உதவிக் குழுக்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
முன்னதாக அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ரூ2,000 வழங்கப்படும் என்பது உள்ளிட்ட முதல் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை கடந்த ஜனவரி 17-ந் தேதி எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருந்தார்.
