புதிய வசதிகளுடன் கூகுள் மேப்ஸ்!

Published On:

| By christopher

கூகுள் நிறுவனம் தனது ‘கூகுள் மேப்ஸ்’ (Google maps) சேவையில் புதிய வசதியை அறிமுகப்படுத்த உள்ளது.

தனது எல்லா சேவைகளிலும் ஏஐ (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பத்தை உட்புகுத்தும் கூகுள், கூகுள் மேப்ஸிலும் ஏஐ வசதியை இணைக்கவுள்ளது.

ADVERTISEMENT

இதுவரை கூகுள் மேப்ஸில் ஒரு குறிப்பிட்ட இடத்தைத் தேடினால் அந்த இடம் குறித்த தகவல்களும், வழிகளும் கிடைக்கும். ஆனால், கூகுள் மேப்ஸின் இந்த  செயற்கை நுண்ணறிவு  தொழில்நுட்பத்துடனான பரிணாமத்தில் நீங்கள் உரையாடல்கள் மூலம் இடங்கள் குறித்த தகவல்களைப் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதாரணத்துக்கு ‘எனக்கு மஞ்சள் நிற விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட உணவகத்துக்குச் செல்ல வேண்டும்’ எனக் கூறினால் அதற்கேற்ற அருகாமையில் உள்ள இடங்களைக் காட்டும்.

ADVERTISEMENT

அத்துடன் ஒரு கேள்வியோடு நின்றுவிடாமல் உரையாடல்போல் உங்களது தேடல் குறித்த கூடுதல் விவரங்களை இனி கூகுள் மேப்ஸில் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூகுள், தனது லார்ஜ் லேங்குவேஜ் மாடல்களுக்கு (LLM) 250 மில்லியன்களுக்கும் அதிகமான இடங்கள் குறித்த தகவல்களைக் கொண்டு பயிற்சி வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ராஜ்

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

சண்டே ஸ்பெஷல்:  ஒரு நாளைக்கு எத்தனை காபி, டீ குடிக்கலாம்?

World Cancer Day : புற்றுநோய் பாதிப்பா? இனி அச்சப்படத் தேவையில்லை!

நடவு செய்யாத நிலத்தில் 50 மூட்டை நெல் அறுவடை: இன்ப அதிர்ச்சியில் விவசாயி!

Photo of author
christopher
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share