கரூரில் நேற்று மாலை நடந்த தவெக தலைவர் விஜய் நடத்திய பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி நள்ளிரவு 12 மணி வரை 40 பேர் உயிரிழந்துள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்துள்ளார். அரசாணை கிடைத்த உடன் விசாரணைக்கான பணிகள் விரைந்து தொடங்கப்படும் என நீதிபதி அருணா ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சம்பவம் நடந்த இடத்தில் ADGP டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆய்வு பணிகளை தொடங்கி உள்ளார். அப்பகுதியில் இருந்தவர்களிடமும் நடந்த சம்பவம் குறித்து அவர் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், நடிகர் விஜய் பிரசாரத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டது; தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது என்றார்.