ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் இன்று (செப்டம்பர் 22) முதல் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஆவினில் நெய், பன்னீர் உள்ளிட்ட பொருட்களின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 3ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த 56 ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 4 அடுக்குகளாக இருந்த ஜிஎஸ்டி வரி விகிதத்தை 5 மற்றும் 18 என இரண்டு அடுக்குகளாக குறைக்க முடிவு எடுக்கப்பட்டது. இந்த ஜிஎஸ்டி சீர்திருந்தம் நாடு முழுவதும் இன்று அமலுக்கு வந்துள்ளது.
ஜிஎஸ்டி வரி சீர்திருந்தம் காரணமாக பால் பொருட்களின் விலையைஆவின் குறைத்துள்ளது. அந்த வகையில் ரூ.120க்கு விற்பனை செய்யப்பட்ட 200 கிராம் பன்னீர் ரூ.110க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ.300க்கு விற்பனை செய்யப்பட்ட 500 கிராம் பன்னீர் ரூ.275க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் 1லிட்டர் நெய் ரூ.690க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.650 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் 50 மில்லி லிட்டர் நெய் ரூ.45, 5 லிட்டர் நெய் ரூ.3,300, 15 கிலோ நெய் ரூ.10,900 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆவினில் விற்பனை செய்யப்படும் பல பால் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.