தமிழகத்தில் 95.39% SIR படிவங்கள் விநியோகம்- தேர்தல் ஆணையம்

Published On:

| By Mathi

legistative assembly election

இந்திய தேர்தல் ஆணையம் நடத்தி வரும் இரண்டாம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில், தமிழ்நாட்டில் இதுவரை 6,11,61,947 படிவங்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இது 95.39% சதவீதம் ஆகும்.

தமிழ்நாட்டில் மொத்தம் 6,41,14,587 வாக்காளர்கள் உள்ளனர். இதில் நேற்று (நவம்பர் 20) மாலை 3 மணி வரை 6,11,61,947 படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 68,467 வாக்குச் சாவடி நிலை அலுவலர்களும் 2,38,853 வாக்குச்சாவடி முகவர்களும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் அதிக எண்ணிக்கையிலான வாக்குச்சாவடி முகவர்களை நியமிக்குமாறு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தமிழ்நாடு, அந்தமான் நிக்கோபார், சத்தீஷ்கர், கோவா, குஜராத், கேரளா, லட்சத்தீவு, மத்தியப்பிரதேசம், புதுச்சேரி, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய 12 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் 2025 நவம்பர் 4 அன்று தொடங்கி டிசம்பர் 4 வரை நடைபெறுகிறது. 2025 அக்டோபர் 27-ம் தேதி நிலவரப்படி, மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 50,97,44,423 ஆக உள்ளது. இதில் 50,40,90,682 கணக்கெடுப்பு படிவங்கள் இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்தத் தீவிர திருத்தப் பணிகளில் 5,32,828 வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள், 11,40,598 வாக்குச் சாவடி முகவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share