மேல் மருவத்தூர் செல்லும் பக்தர்களின் வசதிக்காக தெற்கு ரயில்வே இன்று (நவம்பர் 17) முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தின் முக்கிய ஆன்மீக தளங்களில் ஒன்று மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில். நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள். சமபரிமலைக்கு ஆண்கள் இருமுடி கட்டி, மாலை போட்டு செல்வது போல, தைபூச திருவிழாவையொட்டி ஏராளமான பெண்கள் மேல்மருவத்தூருக்கு இருமுடி கட்டி, மாலை அணிந்து செல்வார்கள்.
இந்தசூழலில் இருமுடி/ தைப்பூசத்தை முன்னிட்டு அதிகளவிலான பக்தர்கள் மேல்மருவத்தூருக்கு வருவார்கள். இதையொட்டி மேல்மருவத்தூரில் 57 ரயில்கள் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
15.12.2025 முதல் 02.02.2026 வரை நடைபெறும் “இருமுடி/தைப்பூசம்” திருவிழாவை முன்னிட்டு, மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் 57 ரயில்கள் ஒரு நிமிடம் நின்று செல்லும்.
காரைக்கால் எக்ஸ்பிரஸ், லோகமான்ய திலக் -சென்னை – மதுரை இடையே செல்லும் வைகை மற்றும் பாண்டியன் எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி – ஹஸ்ரத் இடையே திருக்குறள் எக்ஸ்பிரஸ்,
சென்னை – செங்கோட்டை இடையே செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ், சென்னை – திருச்சி ராக்போர்ட் எக்ஸ்பிரஸ், சென்னை – நாகர்கோயில் எக்ஸ்பிரஸ், சென்னை – கொல்லம் எக்ஸ்பிரஸ், தாம்பரம் – ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ்,
சென்னை -மன்னார்குடி எக்ஸ்பிரஸ், சென்னை – தஞ்சாவூர் உழவன் எக்ஸ்பிரஸ், தாம்பரம் – நாகர்கோயில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் தற்காலிகமாக மேல்மருவத்தூரில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
