ரயில்வே தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக கும்மிடிப்பூண்டி வழியாக இயக்கப்படும் 39 புறநகர் மின்சார ரயில்கள் இன்று ஜூன் 24-ந் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளன. இதற்கு மாற்றாக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 39 Suburban Trains
சென்னையை அடுத்த கும்மிடிப்பூண்டி- பொன்னேரி இடையேயான ரயில் தண்டவாள பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பராமரிப்பு பணிகள் காரணமாக,
சென்னை கடற்கரை- கும்மிடிப்பூண்டி
சூலூர்பேட்டை- நெல்லூர்
சென்ட்ரல்- சூலூர்பேட்டை உட்பட 39 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
சென்னை சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி- சூலூர்பேட்டை இடையேயான அனைத்து புறநகர் மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன
இதற்கு மாற்றாக பயணிகள் வசதிக்காக இன்று காலை முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.சென்னை சென்ட்ரல்-பொன்னேரி, மீஞ்சூர், எண்ணூர்; சென்னை கடற்கரை- பொன்னேரி, எண்ணூர் இடையே 21 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
