இன்று செப்டம்பர் 27ஆம் தேதி நாமக்கல் மற்றும் கரூர் பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
நாமக்கலில் 17 நிமிடங்களில் பேசி முடித்துவிட்டு, கரூரில் மாலை 6.30 மணியளவில் வேலுசாமி புரத்தில் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.
விஜய் பேசி முடித்ததும், பிரச்சார வாகனத்துக்குள் இருந்து மேலே ஏறி வந்த ஆதவ் அர்ஜூனா விஜய்யிடம் அஸ்மிகா என்ற 9 வயது சிறுமியை காணவில்லை என்று தகவல் சொல்ல உடனே விஜய் குழந்தையை கண்டுபிடிக்க உதவுங்கள் என தொண்டர்களிடம் கேட்டுக்கொண்டார். போலீசாரிடமும் உதவுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.
அப்போதே பிரச்சார வாகனத்தை நோக்கி குரல்கள் ஒலித்தன.
விஜய்யிடம் ஆதவ் அர்ஜூனா சைகை காட்டி வேனுக்குள் இறக்கினார்.
விஜய் வேனுக்குள் வந்ததும் ஆதவ் அர்ஜுன் போலீஸ் சொன்ன தகவலை தெரியப்படுத்தியுள்ளார்.
கரூருக்குள் வரும்போதே கூட்ட நெரிசலில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் மயங்கி விழுந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர் என்றதும். போலீசார் உதவியுடன் பிரச்சார வாகனம் வேகமாக நகர்ந்தது.
போகும்போதே விஜய்க்கு தகவல் வந்துக்கொண்டே இருந்தது ஒருவர், மூன்று பேர், ஐந்து பேர், 10 பேர் என உயிரிழப்புகள் செய்தி வந்துக்கொண்டே இருந்தது.
வேனை நடுவழியில் நிறுத்தி காருக்கு மாறியவர் கத்திக் கதறி அழுதுள்ளார். அவருக்கு ஆறுதல் சொல்லி திருச்சி விமான நிலையம் செல்லலாம் என்ற போது, சிலர் திருச்சி போனால் பாதுகாப்பு இருக்காது சாலை வழியாக போகலாம் என்று கூறியுள்ளனர்.
ஆனால் விஜய் புறப்பட மறுத்தவர் நாளை காலை இறந்தவர்களிடம் மன்னிப்பு கேட்டுதான் போவேன் என்று நின்றுள்ளார்.
போலீஸ் அதிகாரிகள் தொடர்புகொண்டு சூழ்நிலை சரியில்லை அங்கிருந்து உடனே புறப்படுங்கள் என அறிவுறுத்தினார்.
அதன் பிறகு திருச்சி சென்று தனி விமானம் மூலமாக சென்னை புறப்பட்டார்.
சென்னை விமானம் நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
விஜய் நண்பர்கள், வீட்டுக்கு போகவேண்டாம் வெளியில் இருப்பதுதான் பாதுகாப்பு என முடிவு செய்துள்ளதாக சொல்கிறார்கள் தவெக நிர்வாகிகள்.
தற்போது வரை 36 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.