திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், 23 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், ஐந்து தொகுதிகள் இறுதி செய்வதில் சிக்கல் நீடித்து வருவதாகவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று (மார்ச் 27) அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றுள்ளது. நல்ல முன்னேற்றம் உள்ளது. தென்காசி, விருத்தாச்சலம் தவிர 16 தொகுதிகளை மீண்டும் காங்கிரஸ் கட்சி பெற்றுள்ளது. தோழமைக் கட்சிகள் கேட்டுக் கொண்டதால் இரண்டு தொகுதிகளை திமுகவால் கொடுக்க இயலவில்லை.
ஈரோடு கிழக்கு தொகுதியை மீண்டும் பெற்றுள்ளோம். 28 தொகுதிகளில் 23 தொகுதிகளை அடையாளம் கண்டுவிட்டோம். 5 தொகுதிகள் குறித்து மீண்டும் பேசி முடிவு செய்வோம்.
கன்னியாகுமரியில் மூன்று தொகுதிகளில் போட்டியிடுகிறோம். சிட்டிங் எம்எல்ஏ தொகுதியை கொடுப்பதில் சிக்கல் உள்ளது. அதேபோல் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் எங்கள் வேட்பாளருக்கு சிக்கல் உள்ளது. அதை முதல்வருடன் பேசி தீர்ப்போம். அடுத்த ஓரிரு நாட்களில் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 2021-ல் காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகள்
பொன்னேரி,
திருப்பெரும்புதூர்
ஈரோடு கிழக்கு
சோளிங்கர்
தென்காசி
ஊத்தங்கரை
அறந்தாங்கி
உதகமண்டலம்
விருதாச்சலம்
கோவை தெற்கு
நாங்குநேரி
காரைக்குடி
கள்ளக்குறிச்சி
மேலூர்
ஸ்ரீவில்லிப்புத்தூர்
சிவகாசி
திருவாடனை
திருவைகுண்டம்
உடுமலைப்பேட்டை
குளச்சல்
மயிலாடுதுறை
விளவங்கோடு
வேளச்சேரி
கிள்ளியூர்
ஓமலூர்
2021 சட்டமன்ற தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது. குறிப்பிடத்தக்கது.
