2026 தமிழக தேர்தல் முடிவுகள் : 234 தொகுதிகள் பட்டியல் -முழு விவரம்!

Published On:

| By Kavi

தமிழக சட்டப்பேரவை தேர்தல் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. 

இதில் 85 சதவிகித வாக்குகள் பதிவாகின. 

ADVERTISEMENT

இந்த நிலையில் நேற்று மே 4 சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 

யாரும் எதிர்பாராத விதமாக தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றுள்ளது. 

ADVERTISEMENT

ஆளும் கட்சியாக இருந்த திமுக எதிர்க்கட்சியாகியுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளரிடம் தோல்வியடைந்துள்ளார்.

எதிர்க்கட்சியாக இருந்த அதிமுக மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. எனினும் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவர் 98,110 வாக்குகள் வித்தியாசத்தில் சுயேச்சை வேட்பாளர்  பிரேம்குமாரை தோற்கடித்துள்ளார். 

ADVERTISEMENT

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் டெபாசிட்டை இழந்துள்ளார். அவரது கட்சி 234 தொகுதிகளிலும் தோல்வியடைந்துள்ளது.

இப்படி யாரும் எதிர்பார்க்காத வகையில் 2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் டுவிஸ்ட்க்கு மேல் டுவிஸ்ட்டாக வந்துள்ளது.

இதில் 234 தொகுதிகளிலும் யார் யார் வெற்றி பெற்று இருக்கிறார்கள் என்ற முழு விவரத்தை கீழே உள்ள பட்டியலில் காணலாம்.

கடந்த முறை திமுக வென்ற 61 தொகுதிகளில் இந்த முறை தவெக வென்றுள்ளது.

கடந்த முறை காங்கிரஸ் வென்ற 4 தொகுதிகளில் இந்த முறை தவெக வென்றுள்ளது.

கடந்த முறை அதிமுக வென்ற 20 தொகுதிகளில் இந்த முறை தவெக வென்றுள்ளது.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share