பி.எஸ் 6 மாடலில் 200 புதிய SETC பேருந்துகள் : என்னென்ன வசதிகள் உள்ளன?

Published On:

| By christopher

200 new SETC buses of PS6 model : What are the facilities?

தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் புதிதாக கொள்முதல் செய்யப்பட்டுள்ள BS6 அதிநவீன இருக்கை மற்றும் படுக்கை வசதிக் கொண்ட 60 பேருந்துகள் ஜூலை மாதம் இறுதியில் பயன்பாட்டிற்கு வரஉள்ளது.

தமிழ் நாட்டில் உள்ள அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகங்களில் 1400 விரைவு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதில் 7 ஆண்டுகளை கடந்து இயக்கப்பட்டு வரும் பேருந்துகளை மாற்றிவிட்டு, அதற்கு பதில் நவீன வசதிகள் கொண்ட 200 புதிய பேருந்துகளை வாங்க போக்குவரத்துக் கழகம் முடிவு செய்தது.

அதன்படி டெண்டர் விடப்பட்ட நிலையில், புதிய அதிநவீன பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு, பாடி கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. முதற்கட்டமாக 60 பேருந்துகள் ஜூலை மாதம் இறுதிக்குள் பொது மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது.

வசதிகள் என்னென்ன?

BS6 தொழில்நுட்பத்தில் இயக்கப்படும் இந்த பேருந்துகளில் வயதானவர்கள் ஏறுவதற்கு வசதியாக அகன்ற புட் பாத் அமைக்கப்பட்டுள்ளது.

இன்ஜினில் வெப்பம் ஏற்பட்டு தீ பற்றினால் அதனை அணைக்க தானியங்கி தீ அணைப்பான் பொருத்தப்பட்டுள்ளது.

மொத்தமுள்ள 200 பேருந்துகளில் 50 பேருந்துகளில் கீழ் பகுதியில் 21  உட்காரும் இருக்கைகளும், கீழ்  மற்றும் மேல் பகுதியில் 20 இருபது படுக்கை வசதிகளும் அமைக்கப்படுகிறது.

மீதமுள்ள 150 பேருந்துகளில் 15 படுக்கை வசதிகளும், 30 இருக்கையும் அமைக்கப்படுகிறது.

படுக்கை வசதியை பயன்படுத்துபவருக்கு வசதியாக சிறிய விசிறி, ரீடிங் லைட் மற்றும் மொபைல் சார்ஜர் அமைக்கப்பட்டுள்ளது.

உட்காரும் இருக்கைகள் புஷ்பேக் வசதியுடன் கால் நீட்டுவதற்கு அகன்ற இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுத்தம் வரும்போது, பயணிகள் அறிந்து கொள்வதற்கு வசதியாக  ஓட்டுநர் இருக்கைக்கு அருகிலேயே மைக் ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

ஏசி பேருந்தில் பயணிகள் ஜன்னலை திறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய பேருந்தில் படுக்கை வசதிக்கு (Sleeper) கட்டணமாக கிலோ மீட்டருக்கு ரூ.1.50ம், உட்காரும் இருக்கைக்கு(Semi Sleeper) கட்டணமாக கிலோ மீட்டருக்கு ரூ.1.15ம் வசூலிக்கப்பட உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

“வரி என்ற பேச்சுக்கே இடமில்லை” : யார் இந்த வீரன் அழகுமுத்துக்கோன்?

உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் ஆர்.மகாதேவன்

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share