பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்தில் 16 அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
குஜராத் மாநில சட்டப்பேரவையில் உள்ள 182 உறுப்பினர்களின் எண்ணிக்கையின்படி, அமைச்சர்களின் அதிகபட்ச எண்ணிக்கை 27 ஆக இருக்கலாம். ஆனால், முதலமைச்சரையும் நேர்த்து தற்போது 17 அமைச்சர்கள் தான் உள்ளனர்.
அங்கு சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனால் அமைச்சரவையை மொத்தமாக மாற்றி அமைக்க பூபேந்திர படேல் முடிவு செய்திருக்கிறார். இந்த முடிவானது, முதல்வர் இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பாஜக தேசிய தலைமையின் அறிவுறுத்தல் பேரில் எடுக்கப்பட்டுள்ளது.
வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்கள் மற்றும் 2027 சட்டமன்றத் தேர்தல்களை மனதில் வைத்து, அனைத்து சமூகங்கள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள சமூகச் சமநிலையைப் பேணும் வகையில் புதிய அமைச்சரவை அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய அமைச்சர்கள் பதவியேற்கும் விழா வெள்ளிக்கிழமை காலை 11:30 மணிக்கு நடைபெறும் என்றும் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.
இதையொட்டி முதல்வரைத் தவிர 16 அமைச்சர்களும் முதல்வரிடம் தங்கள் ராஜினாமா கடிதங்களை இன்று (அக்டோபர் 16) அளித்துள்ளனர். அதனை ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத்திடம் முதல்வர் பூபேந்திர படேலிடம் இன்று இரவு வழங்கவுள்ளார்.
நாளை நடைபெறும் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.