கினியாவில் 100 கால்பந்து ரசிகர்கள் பலி… என்ன நடந்தது?

Published On:

| By christopher

கினியாவில் நடந்த கால்பந்து போட்டியின் போது, ஏற்பட்ட கலவரத்தில் 100 ரசிகர்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

கினியாவின் இரண்டாவது பெரிய நகரம் செர்கோர். இங்கு கிட்டத்தட்ட 2 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இந்த நகரத்தில் நடந்த கால்பந்து போட்டியின் போது, நடுவரின் முடிவு ஒன்றால் கலவரம் ஏற்பட்டுள்ளது.

அப்போது, ரசிகர்கள் மைதானத்துக்குள் இறங்கி மோத தொடங்கினர். இதில், 100க்கும் மேற்பட்ட ரசிகர்கள் இறந்து போனார்கள். வன்முறையில் ஈடுபட்டவர்கள் அருகே இருந்த போலீஸ் நிலையத்தையும் தீ வைத்து கொளுத்தினர்.

அங்குள்ள மருத்துவமனைகளில் சடலங்கள் இறைந்து கிடக்கின்றன. காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கினியாவில் சர்வாதிகாரி தலைவர் மாமாதி தம்பையாவின் பெயரில் இந்த கால்பந்து தொடர் நடத்தப்பட்டது. இதில், இரு உள்ளுர் அணிகள் மோதிய போது, கலவரம் வெடித்துள்ளது. அப்போது, பலரும் கொல்லப்பட்டனர். இன்னும் ஏராளமானோர் அங்கிருந்து தப்பி ஓடினர். கலவரத்தை கட்டுப்படுத்த போலீசாரால் முடியவில்லை.

கினியா மிகவும் ஏழ்மையான நாடு ஆகும். கடந்த 2020 ஆம் ஆண்டு மாமாதி தம்பையா பதவிக்கு வந்தார். அவர் பதவிக்கு வந்ததில் இருந்து இது போன்ற கால்பந்து போட்டிகள் அடிக்கடி அங்கு நடத்தப்படுவது உண்டு. மேற்கு ஆப்ரிக்க நாடுகளான மாலி, பர்கினா ஃபாசோ, நைஜர் போன்ற நாடுகளில் மிலிட்டரி ஆட்சிதான் நடக்கிறது என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

-எம்.குமரேசன்

300 ஆண்டுகளில் இல்லாத மழை… வெள்ளக்காடான கிருஷ்ணகிரி

வாரத்தின் முதல் நாளே குறைந்த தங்கம் விலை… இன்று சவரன் எவ்வளவு?

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு… விழுப்புரத்தில் ஸ்டாலின் ஆய்வு!

வீட்டில் சடலமாக கிடந்த நடிகை சோபிதா… பின்னணி என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share