பிரபல கன்னட சீரியல் நடிகை சோபிதா சிவன்னா மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் ஹசன் நகரை சேர்ந்தவர் சோபிதா. இவர் ஏராளமான கன்னட சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது, 30 வயதாகும் இவர் திருமணத்துக்கு பிறகு கணவருடன் ஹைதராபாத் நகரில் குடியேறினார்.
தெலுங்கு சினிமாக்களிலும் நடித்து வந்தார். ஹைதராபாத்தில் சோபிதா குடியேறி இரு ஆண்டுகள்தான் ஆகிறது. இந்த நிலையில், கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அவரின் உடலை மீட்டு ஒஸ்மானியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உடற்கூறு ஆய்வுக்கு பிறகு, சொந்த ஊரான ஹசனுக்கு கொண்டு செல்லப்பட்டது.
சோபிதாவின் தற்கொலைக்கு காரணம் தெரியவில்லை. சினிமாவில் மிகவும் சக்ஸஸாக இருந்த நிலையில், சோபிதா உயிரை மாய்த்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலையா அல்லது கொலையா? என்கிற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2015 ஆம் ஆண்டு ரங்கி தரங்கா என்ற படத்தின் மூலம் கன்னட திரையுலகில் சோபிதா என்ட்ரி ஆனார். யூ டர்ன், கே.ஜி.எப் சாப்டர் 1 கே.ஜி.எப். சாப்டர் 2 போன்ற படங்களிலும் நடித்துள்ளார். சமூகவலைத் தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்த சோபிதா, ரசிகர்களுடன் அடிக்கடி கலந்துரையாடுவதையும் வாடிக்கையாக வைத்திருந்தார்.
மேலும், பேஷன் டிசைனிங் போன்றவற்றிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். சோபிதாவின் மறைவுக்கு கன்னட திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகினறனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
-எம்.குமரேசன்
300 ஆண்டுகளில் இல்லாத மழை… வெள்ளக்காடான கிருஷ்ணகிரி
வாரத்தின் முதல் நாளே குறைந்த தங்கம் விலை… இன்று சவரன் எவ்வளவு?