எழுத்தாளர் நாறும்பூநாதன் காலமானார்!

Published On:

| By Selvam

எழுத்தாளரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகியுமான நாறும்பூநாதன் இன்று (மார்ச் 16) காலமானார். அவருக்கு வயது 65. Writer Narumpoonathan passed away

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் பிறந்த நாறும்பூநாதன், தனது பள்ளி, கல்லூரி படிப்பை கோவில்பட்டியில் முடித்தார். திருமணத்திற்கு பிறகு, குடும்பத்துடன் நெல்லைக்கு குடிபெயர்ந்தார்.

கல்லூரி காலங்களில் சிறுகதை எழுத தொடங்கினார். தொடர்ந்து நாவல், கட்டுரை என பல நூல்களை எழுதியுள்ளார். பாரத ஸ்டேட் வங்கியில் 33 ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றார். தற்போது இலக்கிய பணிகளை தொடர்ந்து வருகிறார்.

2022-ஆம் ஆண்டு தமிழறிஞர் உ.வே.சா விருதை தமிழக அரசு இவருக்கு வழங்கி சிறப்பித்தது. இவரது சிறுகதை தொகுப்பான ‘கனவில் உதிர்ந்த பூ’ பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா தன்னாட்சி கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களின் பாடநூலாக உள்ளது. ‘யானை சொப்பனம்’ நூலின் கட்டுரைகள் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களின் பாட நூலாக உள்ளது.

இன்று காலை நடைபயிற்சி சென்றபோது நாறும்பூநாதன் மயக்கமடைந்துள்ளார். உடனடியாக அவரை வண்ணாரப்பேட்டை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார் அவரது மறைவு எழுத்தாளர்கள், வாசகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். Writer Narumpoonathan passed away

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share