ADVERTISEMENT

‘தமிழ்நாட்டை தலைகுனியவிடமாட்டேன்’- இன்றும் நாளையும் திமுக பொதுக் கூட்டங்கள்

Published On:

| By Mathi

DMK Public Meetings

தமிழ்நாடு முழுவதும் இன்றும் நாளையும் (செப்டம்பர் 20, 21) ‘தமிழ்நாட்டை தலைகுனியவிடமாட்டேன்’ என்ற தலைப்பில் திமுக சார்பில் பொதுக் கூட்டங்கள் நடைபெறுகின்றன.

திமுக வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டின் மண்-மொழி மானம் காக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் அறிவிக்கப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் 68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தில் இணைந்துள்ள ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களால் முன்மொழியப்பட்டுள்ள ‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ என்ற தீர்மான ஏற்பு கூட்டங்கள் செப்டம்பர் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில், தி.மு.க மாவட்ட வாரியாக நடைபெறும்” என அறிவிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இதனடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் இன்றும் நாளையும் திமுக பொதுக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. இந்தப் பொதுக் கூட்டங்களில் பங்கேற்கும் சிறப்பு பேச்சாளர்கள் பட்டியலையும் திமுக தலைமை ஏற்கனவே அறிவித்துள்ளது.

கரூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின், ‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ என்ற உறுதிமொழியை டெல்லிக்கு கேட்கும் வரை உரத்து சொல்லுங்கள் என உறுதி ஏற்க வைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share