ADVERTISEMENT

பெண்களின் நிதி சார்ந்த மன உளைச்சல் :  புரிந்துகொள்வதும் சரிசெய்வதும்!

Published On:

| By Minnambalam Desk

முனைவர். ச.குப்பன்

பொதுவாக நிதி சார்ந்த மன உளைச்சல் (Financial anxiety) என்பது ஒரு பரவலான பிரச்சினையாகும், ஆனால் இது பெரும்பாலும் இந்தியாவில் பெண்களையே அதிகளவு பாதிக்கிறது, இது அவர்களின் ஒட்டுமொத்த நல்வாழ்விற்கும் முன்னேற்றத்திற்கும் பெரிய தடையாக இருக்கிறது. இந்த மன உளைச்சலானது ஆழ்ந்த சமூகப் பழக்கவழக்கங்கள், நிதி கல்வியறிவு இல்லாமை , தொடர்ச்சியான பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றின் சிக்கலான இடைவினைகளிலிருந்து  உருவாகிறது.

ADVERTISEMENT

நிதி சார்ந்த மன உளைச்சலுக்கான அடிப்படைக் காரணங்கள்

இந்தியப் பெண்களிடையே நிதி சார்ந்த மன உளைச்சலுக்கான காரணங்கள் பன்முகத்தன்மை கொண்டவை, ஒன்றோடொன்று தொடர்புடையவை.

ADVERTISEMENT

சமூக, கலாச்சாரப் பழக்க வழக்கங்கள்:

பாரம்பரியமாக, குடும்பத்திற்குப் பொருளீட்டும் பொறுப்பு ஆண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது, இதனால் பல பெண்கள் நிதி பரிமாற்றம் குறித்த செயல்களைக் கையாளத் தெரியாமல் போகிறது. இந்த ஆணாதிக்க அமைப்பு பெரும்பாலும் பெண்கள் சம்பாதிக்கும் உறுப்பினர்களாக இருந்தாலும் கூட, தங்களுடைய வீட்டின் நிதி பரிமாற்றங்களில் சிறிதளவு அல்லது எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் உள்ளனர். அதாவது நிதி பரிமாற்றங்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் பெரும்பாலும் பெண்களுக்கு இருப்பதில்லை.

ADVERTISEMENT

புதிதாகத் திருமணமான பெண்கள், தங்கள் தொழிலை விட்டுவிட்டு இல்லத்தரசிகளாக மாற வேண்டும் என்ற எதிர்பார்ப்பானது குறிப்பிடத்தக்க நிதி பரிமாற்ற சுதந்திரத்தை இழக்க வழிவகுக்கின்றது, ஆணை சார்ந்து வாழவேண்டிய அவலநிலைக்கு அவர்களை கொண்டு செல்கின்றது. அதனால் அவர்கள் தங்களின் சுய மதிப்பினை இழப்பதற்கும் மன உளைச்சலை அடைவதற்கும் வழிவகுக்கின்றது.

நிதிகுறித்த அடிப்படை கல்வி அறிவு இல்லாமை

நிதி சார்ந்த மன உளைச்சலுக்கு ஒரு முக்கிய காரணி நிதிகல்வி அறிவு இல்லாததாகும். ஆண்களுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் பெண்களுக்கு  நிதி கல்வியறிவு போதுமான அளவு இல்லாமல் மிகவும் குறைவாக இருப்பதாக ஆய்வுகள் தொடர்ந்து காட்டுகின்றன.

இந்த நிதிகல்வி அறிவின் இடைவெளி என்பது பல பெண்களுக்கு நிதி குறித்து திட்டமிடுதல், சேமித்தல், முதலீடு செய்தல் போன்ற அடிப்படை நிதிபரிமாற்றக் கருத்துகளைப் பற்றி அறியாமலும் தெரியாமலும் இருப்பதற்கான காரணமாகின்றது. அவர்களுக்கு தமக்கென புதியதாக வங்கிக் கணக்கை துவங்குவது, அன்றாட நிதி பரிமாற்றங்களுக்காக அதனை பயன்படுத்துவது, வங்கியிலிருந்து கடன் வாங்குவது அதனை நிர்வகிப்பது அல்லது பரஸ்பர நிதி அல்லது காப்பீடு போன்றவைகளில் முதலீடு செய்வது ஆகியவற்றை எவ்வாறு கையாளுவது என்பது குறித்த விவரங்கள் தெரியாமல் இருக்கின்றனர், அவ்வாறான அறியாமையானது பெண்களுக்கு அதுகுறித்த பயமும், முடிவெடுக்க முடியாத நிலையும் ஏற்படுகிறது.

பொருளாதார ஏற்றத்தாழ்வுகள்

பாலின ஊதிய இடைவெளி, முறையான நிதிபரிமாற்ற சேவைகளுக்கான வரையறுக்கப்பட்ட அணுகுதல் ஆகியவை சிக்கலை மேலும்  தீவிரமாக்குகின்றன. பெரும்பாலும் ஆண்களுக்கு சமமாக அதே வேலையை செய்கின்ற பெண்கள் ஆண்களை விட மிகவும் குறைவான ஊதியம் பெறுகிறார்கள்,

இது அவர்களின் வருமானம், சேமிப்பு ஆகிய திறன்களைக் கட்டுப்படுத்துகிறது. நிதிபரிமாற்ற உள்ளடக்கத்தை ஊக்குவிப்பதற்கான அரசாங்க முயற்சிகள் இருந்தபோதிலும், பல பெண்களுக்கு குறிப்பாக கிராமப்புறங்களில். வாழும் பெண்களுக்கு இன்னும் கடன், சேமிப்புக் கணக்கு அல்லது நிதி பரிமாற்றத்திற்கான அடிப்படை அடையாள அட்டை கூட  கிடைக்காமல் உழல்கின்றனர், 

மனஉலைச்சல், உடல் நலனில் ஏற்படும் தாக்கம்

நிதி பரிமாற்றம் குறித்த மன உளைச்சல் என்பது  ஒரு மனச் சுமை மட்டுமன்றி இது ஒரு பெண்ணின் உடல்நலம், வாழ்க்கை முடிவுகளில் உறுதியான குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்துகிறது.

மன உளைச்சலும், உணர்ச்சிபூர்வமான பாதிப்பும்

நிதி பரிமாற்ற மன உளைச்சல் ஆனது பதட்டம், மனச்சோர்வு ,சுயமரியாதை குறைவு உள்ளிட்ட உளவியல் பாதிப்புகளுடன் வலுவாக இணைக்கப்பட்டுள்ளன. தொடர்ச்சியான மன அழுத்தம் தூக்கமின்மை, மனநிலை மாற்றங்கள், உதவியற்ற உணர்வுக்கு வழிவகுக்கின்றது.

இது ஒரு மோசமான சுழற்சியாகும். நிதிபரிமாற்றத்திற்கான பாதுகாப்பின்மை மன உளைச்சலுக்கு வழிவகுக்கிறது, இது ஒரு பெண்ணின் வேலை செய்யும், சம்பாதிக்கும் திறனை மட்டுமல்லாது , அவளுடைய நிதி பரிமாற்றங்களை தானே நிர்வகிக்கும் திறனைப் பாதிக்கின்றது. இதனால் அவள் வறுமை, மோசமான மன உளைச்சல் எனும் சுழற்சியில் சிக்கி தவிக்கின்ற அவலநிலைக்கு கொண்டு செல்கின்றது.

வரையறுக்கப்பட்ட சுயாட்சி

பெண்களுக்கு நிதி பரிமாற்ற அதிகாரம் இல்லாதபோது, ​​அவர்களால் தம்முடைய வாழ்க்கையில் மிக முக்கியமான  முடிவுகளை சுதந்திரமாக எடுக்க முடிவதில்லை. இது அவர்களின் புதிதாக தொழில் துவங்குகின்ற ஆசைகள் முதல் குடும்பத்தை கட்டுப்படுத்துதல் , ஆரோக்கியமற்ற அல்லது தவறான குடும்ப உறவை விட்டு வெளியேறும் அவர்களின் திறன் வரை அனைத்தையும் பாதிக்கின்றது. நிதி பரிமாற்ற சுதந்திரம் என்பது பெரும்பாலும் உண்மையான அதிகாரமளிப்புக்கான  ஒரு முன் நிபந்தனையாகும்.

முன்னோக்கி செல்லும் பாதையை வகுத்தலும்: தீர்வுகளும் அதிகாரமளித்தலும்

நிதிபரிமாற்றம் குறித்த மன உளைச்சலைக் எதிர்த்துப் போராடுவதற்கு தனிப்பட்ட, அமைப்பு ரீதியான சிக்கல்களைத் தீர்வு செய்யும் பன்முக அணுகுமுறை தேவைப்படுகிறது.

நிதி பரிமாற்ற கல்வி அறிவை ஊக்குவித்தல்

மிக முக்கியமான படிமுறை, பெண்கள்  நிதிபரிமாற்றங்களை நிர்வகிக்க தேவையான நிதி பரிமாற்ற கல்வி அறிவுடனும், திறன்களுடனும் தயார்ப்படுத்துவதாகும். இது கதைசொல்லுதல், முதன்மை பாத்திரங்களைக் கொண்டு நடிப்பு , ஊடாடும் அமர்வுகள் போன்ற அணுகக்கூடிய வடிவங்களைப் பயன்படுத்தும் இலக்கு சார்ந்த நிதி பரிமாற்ற கல்வி அறிவு திட்டங்கள் மூலம் இதைச் செய்யலாம். இந்தத் திட்டங்கள் பட்ஜெட் போடுதல், சேமித்தல், கடன் மேலாண்மை, காப்பீடு , பரஸ்பர நிதி போன்ற நிதிபரிமாற்ற நடவடிக்கைகளைப் புரிந்துகொள்வது போன்ற அடிப்படை தலைப்புகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். நிறுவனங்கள், வங்கிகள் இந்த திட்டங்களை அதிகளவில் வழங்குகின்றன, சில நேரங்களில் கிராமப்புறங்களில் உள்ள மீச்சிறு தொழில்முனைவோர் அல்லது சுயஉதவிகுழுக்கள் போன்ற குறிப்பிட்ட குழுக்களுக்காக இவை வடிவமைக்கப்படுகின்றன.

நிதிபரிமாற்ற சுயாட்சியை ஊக்குவித்தல்

குடும்பங்களும், சமூகங்களும் பெண்கள் தங்களுடைய நிதிபரிமாற்றங்களை தாங்களே பொறுப்பேற்க தீவிரமாக ஆதரிக்க வேண்டும். இதில் அவர்களை பொருளீட்டுகின்ற பணிகளை செய்யமாறு ஊக்குவித்தல், அவர்களின் சொந்த வங்கிக் கணக்குகளை நிர்வகித்தல், வீடுகளின் நிதி பரிமாற்ற நடவடிக்கைகளில் முடிவுவெடுப்பதில் பங்கேற்பது ஆகியவை அடங்கும்.

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல்:

எண்ணிம வங்கி, அறிதிறன்பேசி பரிமாற்றங்களின் எழுச்சி நிதிபரிமாற்ற நடிவடிக்கையில் உள்ள இடைவெளியைக் குறைக்க ஒரு பெரிய வாய்ப்பை வழங்குகிறது. பெண்களிடையே எண்ணிம கல்வியறிவை ஊக்குவிப்பது அவர்களுக்கு நிதிபரிமாற்ற சேவைகளை அணுகவும், பரிமாற்றங்களை மேற்கொள்ளவும், நிதிபரிமாற்ற வரலாற்றை உருவாக்கவும் ஒரு பாதுகாப்பான, வசதியான வழியை வழங்கமுடியும்.

கொள்கை, அமைப்பு ரீதியான மாற்றம்

பாலின ஊதிய இடைவெளியை களைந்து, கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் சமமான அணுகலை உறுதி செய்யவும் அரசாங்கக் கொள்கைகள் தொடர்ந்து சரியானதாக இருக்க வேண்டும். மேலும், பெண்கள் நிதிபரிமாற்ற ரீதியாக வளர்ந்து வெற்றிபெறக்கூடிய சூழலை வளர்ப்பதற்கு நிதிபரிமாற்ற சேவைகளை மேலும் அணுகக் கூடியதாகவும், மலிவு விலையிலும், பெண்களுக்கு ஏற்றதாகவும் மாற்றுவது மிக முக்கியமாகும்.

இந்தப் பிரச்சினைகளை நேரடியாகக் கையாளுவதன் மூலம், பெண்களுக்கான நிதிபரிமாற்றம் குறித்த மன உளைச்சலின் சுமையைக் குறைக்க உதவலாம், இந்தியப் பெண்கள் பொருளாதார சுதந்திரத்தை மட்டுமல்ல, உண்மையான நல்வாழ்வையும், தங்கள் வாழ்க்கையின் மீது கட்டுப்பாட்டு உணர்வையும் அடைய இதன்வாயிலாக அதிகாரம் அளிக்கலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share