ஆந்திரப் பிரதேசத்தில் அடையாளம் தெரியாத பெண் இரு துண்டுகளாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொலையுண்ட பெண்ணின் பாதி உடல் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் மீதியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
ஆந்திரப் பிரதேசம் மாநிலம், அனகபள்ளி மாவட்டத்தில் பயாவரம் தேசிய நெடுஞ்சாலை அருகே அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக காவல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இறந்த பெண்ணுக்கு சுமார் 35 முதல் 40 வயது இருக்கும் என்றும், அவரது புகைப்படங்கள் அடையாளம் காணும் பொருட்டு அப்பகுதியில் பரப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
அடையாளம் தெரியாத பெண்ணின் இடுப்பிலிருந்து கீழ்ப்பகுதியை துண்டாக வெட்டி, படுக்கை விரிப்பில் சுற்றிய நிலையில், பாலத்தின் அருகே மர்ம நபர்கள் வீசியுள்ளனர். பெண்ணின் மறுபாதி உடலை தேடி வருகிறோம். இந்த கொலை சம்பவம், தனிப்பட்ட தகராறு காரணமாகவா அல்லது வேறு ஏதேனும் குற்றத்துடன் தொடர்புடையதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறோம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். Womans severed body found in Andhra