குட்டி விநாயகர் முதல் சமோசா வரை…. சுனிதா வில்லியம்சின் விண்வெளி சுவாரஸ்யங்கள்!

Published On:

| By Kumaresan M

இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவுக்கு இன்று (மார்ச் 17) பிறந்த நாள். 1962-ஆம் ஆண்டு மார்ச் 17 ஆம் தேதி கல்பனா சாவ்லா ஹரியானாவில் பிறந்தார். விண்வெளிக்கு பறந்த முதல் இந்திய வீராங்கனை இவர்தான். கடந்த 2003 ஆம் ஆண்டு கொலம்பியா விண்கலம் வெடித்து சிதறியதில் கல்பனா இறந்து போனார்.Williams bring samosas to space

பின்னர், கல்பனாவை பின்பற்றி மற்றொரு இந்திய விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் குறிப்பிடத்தக்க சாதனைகளை செய்து கொண்டிருக்கிறார். கடைசியாக கடந்த ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி விண்வெளிக்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ் நாளை (மார்ச் 18) மீண்டும் பூமி திரும்புகிறார். பல தடங்களுக்கு பிறகு, பூமிக்கு திரும்பும் அவரது வருகையை உலகமே எதிர்நோக்கி காத்திருக்கிறது.

இந்த இரு விண்வெளி வீராங்கனைகளும் இந்தியா மீது அதிக பற்றுக் கொண்டவர்கள். இருவருமே தாங்கள் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்பதை அடிக்கடி உணர்த்திக் கொண்டே இருப்பார்கள். சுனிதா ஒவ்வொரு விண்வெளி பயணத்தின் போதும், குட்டி விநாயகர் சிலை, பகவத் கீதை ஆகியவற்றை தன்னுடன் எடுத்து செல்வார். தனது வாழ்க்கையை வழிநடத்துவது விநாயகர்தான் என்றும் சுனிதா கூறுவது உண்டு. Williams bring samosas to space

விண்வெளியில் தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழ்வார். இந்திய உணர்வு தனது தந்தையை நினைவுப்படுத்துவதாகவும் சுனிதா அடிக்கடி கூறுவார்.

கல்பனாவும், வில்லியம்சும் இந்திய உணவு வகைகளை விரும்பி உண்பார்கள். இருவருக்கும் உருளைக்கிழங்கு சமோசா பிடித்தனமானது. சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிக்கு சமோசாவை கொண்டுபோவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஆனால், கல்பனா விண்வெளிக்கு சமோசாக்களை எடுத்து சென்றதில்லை.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share