டீ அல்லது ப்ளாக் காபி : காலையில் குடிக்க எது சிறந்தது?

Published On:

| By Santhosh Raj Saravanan

Which is better for health tea or black coffee full details

டீ அல்லது ப்ளாக் காபியில் எது உடல்நலனுக்கு உகந்தது, எதைப் பருகலாம் என்று விரிவாகப் பார்க்கலாம்.

இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கையை டீ அல்லது காபி, ப்ளாக் டீ அருந்துவதில் இருந்துதான் தொடங்குகிறார்கள். இந்தியாவில் டீ, காபி ஆகிய இரு பானங்களும்தான் முக்கியமானவையாக உள்ளன. கோடிக்கணக்கான மக்களிடம் டீ, காபி அருந்து பழக்கங்கள் உள்ளன. சிலர் டீயை விட காபிதான் உடல்நலனுக்கு சிறந்தது என்று வாதிடுகிறார்கள்.

ADVERTISEMENT

ஆனால், பலரும் தேநீர், குறிப்பாக மூலிகைத் தேநீர் உடல்நலனுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குவதாக குறிப்பிடுகிறார்கள். அண்மையில் தேநீரை விட ப்ளாக் காபி எனப்படும் பால் கலக்காத காபி பிரபலமடைந்துள்ளது. இந்த நிலையில் டீ அல்லது காபி எது நன்மையானது என விரிவாக பார்க்கலாம்.

தினமும் காலை டீ குடித்தாலும், காபி குடித்தாலும் இரண்டுக்கும் இடையிலான முக்கிய வேறுபாடுகளை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். முக்கிய வேறுபாடுகள் என்பது காஃபின் எவ்வளவு உள்ளது என்பதில் உள்ளது. ஒரு கப் ப்ளாக் காபியில் 90 – 100 மி.கி காஃபின் உள்ளது. ஆனால், ப்ளாக் டீயில் 20 – 25 மி.கி மட்டுமே காஃபின் உள்ளது. காஃபின் அதிகமாக இருப்பதுதான் ப்ளாக் காபியை விருப்பத் தேர்வாக மாற்றத் தூண்டுகிறது.

ADVERTISEMENT

காலையில் ப்ளாக் காபி அருந்துவது மூளையில் செயல்பாட்டை அதிகரிக்கிறது, காஃபின் நரம்பு மண்டலத்தை தூண்டி ஆற்றலை வழங்குகிறது. நம் கவனம் செலுத்தும் தன்மையை மேம்படுத்துகிறது. நீங்கள் காலை எழுந்து படிக்கிறீர்கள் அல்லது அலுவலகம் செல்கிறீர்கள் என்றால் டீயை விட ப்ளாக் காபி உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும் விழிப்புடன் இருக்க உதவுகிறது.

ப்ளாக் காபி எடையை நிர்வகிக்க உதவுகிறது. காபியை சர்க்கரை, பால் இல்லாமல் குடிக்கும்போது நமது புத்துணர்வு அதிகரிப்பதோடு, கொழுப்பை எரிக்க உதவுகிறது. ஆனால், டீ-யில் அதிகளவு பால், சர்க்கரை சேர்க்கப்படுவதால் கலோரி அதிகரிக்கிறது.

ADVERTISEMENT

ப்ளாக் காபியில் பாலிபினால்கள், குளோரோஜெனில் அமிலம் உள்ளிட்ட ஆக்சிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. இவை உடலில் வீக்கங்களை குறைக்கின்றன. இதய நோய், நீரிழிவு நோய் உள்ளிட்ட நாள்பட்ட நோய்களையும் குறைக்கும் பண்புகள் உள்ளது. டீயில் ஆக்சிஜனேற்றிகள் இருந்தாலும், காபியில் நன்மையளிக்கும் பண்புகள் நிறைந்துள்ளன.

ப்ளாக் காபியில் நினைவாற்றலை அதிகரிக்கும், மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ப்ளாக் காபி தொடர்ந்து குடிப்பது அல்சைமர், பார்கின்சன் உள்ளிட்ட நரம்புச் சிதைவு நோய்களை ஏற்படுத்தும் அபாயத்தை குறைக்கிறது. டீயில் அறிவாற்றலுக்கு நல்லதுதான் என்றாலும் கூட, ப்ளாக் காபியில் அதிகளவிலான நன்மைகள் உள்ளன.

தொடர்ந்து உடற்பயிற்சி செய்பவர்களுக்கு ப்ளாக் காபி மிகவும் நன்மையளிக்ககூடியதாக உள்ளது. உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு அதனை குடிப்பது அட்ரினலின் அளவை அதிகரிக்கிறது. வலிமை, செயல்திறனையும் அதிகரிப்பதோடு, நன்றாக உடற்பயிற்சி செய்யும் ஆற்றலையும் உங்களுக்கு அளிக்கிறது.

ஒரிஜினல் காபி கொட்டைகளில் இருந்து காபி தயாரித்து குடிப்பது ஆரோக்கியமான வழிமுறையாகும். சர்க்கரை, செயற்கை சுவையூட்டிகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். என்றாலும் கூட சுவைக்காக சிறிது இலவங்கப்பட்டை சேர்த்துக்கொள்ளலாம். மிதமாக குடிக்கும்போது டீயை விட ப்ளாக் காபி அதிக நன்மைகளை வழங்குகிறது.

அதற்காக பால் சேர்க்கப்பட்ட டீ, ப்ளாக் டீ ஆரோக்கியமற்றது என்று அர்த்தமல்ல. அவற்றை நீங்கள் நாளுக்கு இரண்டு முறை வரை குடிக்கலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share