ADVERTISEMENT

சம்பள உயர்வு எப்போது முதல் கிடைக்கும்? 8வது சம்பள கமிஷன் எப்படி இருக்கும்?

Published On:

| By Santhosh Raj Saravanan

when will central govt employees get 8th pay commission salary hike

மத்திய அரசு ஊழியர்களுக்கான 8வது சம்பள கமிஷன் வந்த பிறகு எப்போது முதல் சம்பள உயர்வின் பலன்கள் கிடைக்கும் தெரியுமா?

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான 8வது சம்பள கமிஷன் குறித்த அறிவிப்புகள் வந்துவிட்டன. ஆனால், எப்போது சம்பளம் உயரும் என்ற தெளிவான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. நாடாளுமன்றத்தில் இதுகுறித்து கேள்விகள் கேட்கப்பட்டபோது மத்திய அரசு இதுகுறித்து உரிய நேரத்தில் முடிவெடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 நவம்பரில், 8வது சம்பளக் கமிஷனுக்கான விதிமுறைகள் அங்கீகரிக்கப்பட்டு, அறிக்கை சமர்ப்பிக்க 18 மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதனால், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஊழியர்கள் சம்பள உயர்வுக்காக காத்திருக்க வேண்டியிருக்கும்.

ADVERTISEMENT

நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி நாடாளுமன்றத்தில் கூறுகையில், “8வது சம்பளக் கமிஷனின் பரிந்துரைகளை எப்போது செயல்படுத்துவது என்பது குறித்து அரசு உரிய நேரத்தில் முடிவெடுக்கும்” என்று தெரிவித்தார். மேலும், பரிந்துரைகள் ஏற்கப்பட்டால், அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். இது ஊழியர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தேதியைத் தரவில்லை என்றாலும், பரிந்துரைகள் ஏற்கப்பட்டால், அதற்கான நிதி திட்டமிடல் இருக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது.

கடந்த காலங்களில் 5வது, 6வது மற்றும் 7வது சம்பளக் கமிஷன்கள் சுமார் 10 வருட இடைவெளியில் அறிவிக்கப்பட்டன. அவை முறையே 1996, 2006 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் அமல்படுத்தப்பட்டன. மற்றொரு முக்கிய அறிகுறி, அகவிலைப்படி உயர்வு. இந்த அகவிலைப்படி என்பது அடிப்படை சம்பளத்தில் 50 சதவீதத்தை தாண்டும்போது, ஊழியர் சங்கங்கள் சம்பள மறுசீரமைப்பு மற்றும் அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைக்கக் கோரிக்கை வைத்துள்ளன.

ADVERTISEMENT

விதிமுறைகளின்படி, சம்பள கமிஷன் தற்போது பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம், படிகள் மற்றும் ஓய்வூதியம் ஆகியவற்றை மறுஆய்வு செய்யும். இருப்பினும், நிதி அமைச்சகம் இரண்டு முக்கிய கோரிக்கைகள் குறித்து தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது. “தற்போது அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை அடிப்படை சம்பளத்துடன் இணைக்க எந்த முன்மொழிவும் இல்லை. மேலும், கமிஷனின் அறிக்கை வருவதற்கு முன்பே இடைக்கால நிவாரணம் எதுவும் உறுதியளிக்கப்படவில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

8வது சம்பளக் கமிஷன் ஜனவரி 1, 2026 முதல் சம்பளத்தை திருத்தி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் நடைமுறையில், ஊழியர்கள் இன்னும் நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். கடந்த கால அனுபவங்களின்படி, சம்பளம் உயர்வுக்கான அமல்படுத்தும் தேதிக்கும், வங்கிக் கணக்கில் முதல் உயர்வுத் தொகை வந்து சேர்வதற்கும் இடையே ஒரு தாமதம் இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

7வது சம்பளக் கமிஷன் ஜனவரி 2016 முதல் அமலுக்கு வந்தது. ஆனால், மத்திய அமைச்சரவை ஒப்புதல் ஜூன் 2016 இல் தான் கிடைத்தது. அதன் பிறகுதான் நிலுவைத் தொகைகள் அடுத்த சில மாதங்களில் வழங்கப்பட்டன. 8வது சம்பளக் கமிஷன் தனது அறிக்கையை சமர்ப்பிக்க 18 மாதங்கள் அவகாசம் எடுத்துக்கொள்ளும். அதன் பிறகு மத்திய அமைச்சரவை ஒப்புதல், விதிமுறைகள் அறிவிப்பு, துறைகள் வாரியாக கணக்கீடு என பல படிகள் உள்ளன. இதனால், காலதாமதம் மேலும் நீட்டிக்கப்படும். யதார்த்தமாகப் பார்த்தால், ஊழியர்கள் 2026-27 நிதியாண்டில் தான் சம்பள உயர்வு மற்றும் நிலுவைத் தொகையை எதிர்பார்க்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share