முட்டையை பச்சையாக சாப்பிடுவது, வேகவைத்து சாப்பிடுவது, ஆம்லேட் செய்து சாப்பிடுவது இதில் எது சிறந்த வழியாக இருக்கும் என்பதைக்காணலாம்.
முட்டைகள் புரதத்தின் சிறந்த ஆதாரமாக உள்ளன. முட்டைகள் தசை வளர்ச்சிக்கு மிகவும் நன்மை பயக்கும். மக்கள் நாள்தோறும் முட்டைகளை தங்கள் அன்றாக உணவுகளில் சேர்த்துக்கொள்கிறார்கள். முட்டை சுவையில் மட்டுமல்ல உடலுக்கும் ஏராளமான நன்மைகளை அளித்து வருகிறது. முட்டை மிகச்சிறந்த காலை உணவாக கருதப்படுகின்றன. பலர் முட்டைகளை வேகவைத்து சாப்பிட விரும்புகிறார்கள், பலரும் ஆம்லெட், ஆஃப் ஆயில், கலக்கியாக செய்து சாப்பிடுகிறார்கள்.முட்டைகளை சாப்பிடுவது உடலுக்கு போதுமான புரதத்தை எவ்வாறு வழங்குகிறது மற்றும் தசை வளர்ச்சியை ஊக்குவிக்கிறது என்பதைப் பார்க்கலாம்.
முட்டைகளில்உள்ளசத்துக்கள் : முட்டைகளில் உடலுக்குத் தேவையான அனைத்து அமினோ அமிலங்களும் (Amino acids)இருப்பதால் அவை முழுமையான புரதமாகக் கருதப்படுகின்றன. ஒரு பெரிய முட்டையில் தோராயமாக 6 முதல் 7 கிராம் உயர்தர புரதம் (Eggs are high in protein) உள்ளது. கூடுதலாக, முட்டைகளில் வைட்டமின பி12, வைட்டமின் டி, கோலின், செலினியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன. மஞ்சள் கரு கொழுப்பின் மூலமாக மட்டுமல்லாமல் நுண்ணூட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. எனவே, மஞ்சள் கருவை அகற்றவிட்டு முட்டைகளை சாப்பிடுவது நல்லதல்ல.
பச்சை முட்டைகளை சாப்பிடலாமா? : முட்டைகளை நன்கு சமைத்து (Benefits of Boiled Eggs) சாப்பிடுவது தான் சிறந்தது. ஏனெனில் பச்சை முட்டைகள் சாப்பிடுவது பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்க கூடும். பச்சை முட்டைகளில் உள்ள அவிடின் எனப்படும் புரதம் பயோட்டின் உறிஞ்சுதலில் தலையிடக்கூடும், மேலும் சால்மோனெல்லா தொற்று ஏற்படும் அபாயத்தையும் ஏற்படுத்துகிறது.
முட்டை எப்படி சாப்பிடுவது சிறந்தது? : முட்டைகளை வேகவைத்து அல்லது லேசான ஆம்லெட்டாக சாப்பிடுவது பாதுகாப்பானது, மிகவும் நல்லதும் கூட. அதிகப்படியான எண்ணெய்யில் முட்டைகளை வறுப்பது அல்லது சமைப்பது கூடுதல் கலோரிகளைச் (Extra calories) சேர்க்கிறது, இது உங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். முட்டைகள் அல்லது புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது, குறிப்பாக உடற்பயிற்சி செய்த 30 முதல் 60 நிமிடங்களுக்குள் சாப்பிடுவது தசை வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
பலர் முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிட்டு மஞ்சள் கருவை (not avoid egg yolk) முழுவதுமாக நிராகரிக்கும் தவறை செய்கிறார்கள். ஆனால் இதைச் செய்யக்கூடாது. முட்டையை மிதமான அளவில் சாப்பிடுவது பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. ஒவ்வொருவரின் உடற்தகுதிக்கு ஏற்ப எத்தனை முட்டைகள் சாப்பிட வேண்டும் என்று உள்ளது. எனவே, ஏற்கனவே அதிக கொழுப்பு அல்லது இதய நோய் உள்ளவர்கள் மருத்துவரின் பரிந்துரைக்கு ஏற்ப முட்டைகளை சாப்பிடலாம்.
