ADVERTISEMENT

காதலா? இல்ல இலவச சாப்பாடா? உஷார்… இது ‘ஹோபோசெக்சுவாலிட்டி’ (Hobosexuality) டிரெண்ட்!

Published On:

| By Santhosh Raj Saravanan

what is hobosexuality financial exploitation in relationships signs red flags tamil

“காதல் கண் இல்லாதது” என்பார்கள். ஆனால், இன்றைய காலகட்டத்தில் சிலரது காதலுக்குக் கண் மட்டுமல்ல, கால்குலேட்டரும் இருக்கிறது. இணையத்தில் இப்போது வைரலாகி வரும் ‘ஹோபோசெக்சுவாலிட்டி’ (Hobosexuality) என்ற உறவுமுறை, காதலின் பெயரால் நடக்கும் ஒரு நூதனமான ‘சர்வைவல்’ (Survival) பிளான்!

ADVERTISEMENT

அது என்ன ஹோபோசெக்சுவல்‘? ‘Hobo’ (நாடோடி/வீடற்றவர்) என்ற வார்த்தையிலிருந்து இது வந்தது. சுருக்கமாகச் சொன்னால், ஒருவர் தங்குவதற்கு இடம் வேண்டும் என்பதற்காகவும், தனது அன்றாட வாழ்க்கைச் செலவுகளைக் குறைப்பதற்காகவும் மட்டுமே இன்னொருவருடன் உறவில் இணைவது.

ADVERTISEMENT

இவர்களைப் பொறுத்தவரை நீங்கள் காதலர் அல்ல; ஒரு இலவச தங்கும் விடுதி” (Free Lodge)!

வாடகை மட்டுமல்ல… ஒரு பேக்கேஜ் டீல்‘: முன்பு இது வீட்டு வாடகையை மிச்சப்படுத்துவதற்காக மட்டுமே என்று பேசப்பட்டது. ஆனால், இதன் ஆழம் இன்னும் அதிகம். இவர்கள் உங்கள் வீட்டிற்குள் நுழைந்துவிட்டால், உங்களின் ஒட்டுமொத்த ‘வளங்களையும்’ (Resources) சுரண்ட ஆரம்பித்துவிடுவார்கள்.

ADVERTISEMENT
  • கூரை (Shelter): வாடகை கட்டத் தேவையில்லை.
  • உணவு (Food): நீங்கள் வாங்கும் மளிகைப் பொருட்கள், நீங்கள் ஆர்டர் செய்யும் உணவு என அனைத்தும் இவர்களுக்கு இலவசம்.
  • பில்கள் (Bills): மின்சாரம், வைஃபை (Wi-Fi), ஓடிடி சந்தா என எதற்கும் இவர்கள் பணம் கொடுக்க மாட்டார்கள்.

சுருக்கமாக, இவர்கள் தங்கள் சொந்தப் பணத்தைச் செலவழிக்காமல், உங்களின் உழைப்பில் வாழ்வதற்காகவே உங்களைக் காதலிப்பார்கள்.

கோல்ட் டிக்கர் (Gold Digger) vs ஹோபோசெக்சுவல்: இவர்கள் கோல்ட் டிக்கர்கள் அல்ல.

ADVERTISEMENT
  • Gold Digger: இவர்கள் உங்கள் பணத்தில் கார், நகை, பங்களா என ஆடம்பரத்தை (Luxury) எதிர்பார்ப்பார்கள்.
  • Hobosexual: இவர்கள் அடிப்படை வசதியை (Basic Needs) மட்டுமே எதிர்பார்ப்பார்கள். “தலைக்கு மேலே கூரை, தட்டில் சோறு, கையில் ரிமோட்” – இது கிடைத்தால் போதும். இவர்கள் பணக்காரர்களைத் தேடுவதில்லை; தனியாக வீடு வைத்திருக்கும் யாராக இருந்தாலும் இவர்களுக்கு ஓகே தான்!

கண்டுபிடிப்பது எப்படி? (Red Flags):

  1. அசுர வேகம்: பழகிய சில வாரங்களிலேயே “நாம் ஏன் சேர்ந்து வாழக்கூடாது?” (Living Together) என்று நச்சரிப்பார்கள்.
  2. நிரந்தர வேலையின்மை: எப்போது பார்த்தாலும் வேலையில்லாமல் இருப்பார்கள் அல்லது “வேலை தேடிக்கொண்டிருக்கிறேன்” என்று சொல்லிக்கொண்டே உங்கள் பணத்தில் வாழ்வார்கள்.
  3. பணம் கேட்டால் எஸ்கேப்: வீட்டு வாடகை அல்லது மளிகைச் செலவில் ஷேர் (Share) கேட்டால், “அடுத்த மாசம் தரேன்” என்று இழுத்தடிப்பார்கள்.

உஷார் மக்களே… உறவுகள் பரஸ்பர அன்பின் அடிப்படையில் இருக்க வேண்டுமே தவிர, பிழைப்பு வாதமாக இருக்கக்கூடாது. யாராவது அவசரமாக உங்கள் வீட்டுக்குக் குடிபெயர நினைத்தாலோ, உங்கள் செலவில் வாழ நினைத்தாலோ, சற்று நிதானியுங்கள். நீங்கள் காதலிப்பது ஒரு துணையா அல்லது உங்களை ஏடிஎம்-ஆக (ATM) பார்க்கும் நபரா என்பதை உறுதி செய்யுங்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share