தவெக தலைவர் இன்று மாலை கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் பேச தொடங்கிய சற்று நேரத்திலிருந்தே கூட்டத்திலிருந்து ஆம்புலன்ஸ் வெளியேறத் தொடங்கியது.
ஆம்புலன்ஸ் நடுவில் வந்ததால் சற்று நேரம் பேச்சை நிறுத்தி ஆம்புலன்ஸுக்கு வழிவிட அறிவுறுத்தினர் விஜய்.
பின்னர் பிரச்சார பேருந்துக்கு கீழே இருந்தவர்கள் விஜய்யை பார்த்து ஏதோ சொல்ல, வண்டியில் இருந்த தண்ணீரை எடுத்துவரச் சொல்லி தொண்டர்களை நோக்கி வீசினார்.
உடனே பேருந்தில் இருந்த ஜெகதீஷ் என்பவரிடம் ஒரு ஆம்புலன்ஸ் சிக்கிரம் கொடுப்பா என்றார்… பின்னர் டாக்டர் பிரபு பக்கத்துல வாங்க எனவும் அழைத்தார்.
இப்படி விஜய் பேசும்போதே பலர் மயக்கமடைந்திருக்கின்றனர். எனினும் தனது பேச்சை தொடர்ந்தார்.
அப்போது பேருந்துக்குள் இருந்த ஆதவ் அர்ஜூனா மேலேயேயும், கீழேயும் ஏறி இறங்கி கொண்டே இருந்தார். இறுதியாக மேலே ஏறிய ஆதவ் அர்ஜூனா அஸ்மிகா என்ற குழந்தையை காணவில்லை… நீங்கள் கொஞ்சம் கண்டுபிடித்து தரச்சொல்லுங்கள் என்று சொல்ல, விஜய்யும் தவெக தொண்டர்களை பார்த்து அக்குழந்தையை கண்டுபிடித்து தருமாறு கேட்டுக்கொண்டார்.

இந்த சம்பவங்களை எல்லாம் வீடியோ காட்சிகள் தெளிவாக காட்டுகின்றன.
கூட்டத்தில் கதறல் சத்தம் கேட்ட பின்னரும் சுமார் 10 நிமிடங்கள் பேசினார் விஜய். அசாதாரண சூழல் உருவாகிறது என்பதை உணர்ந்து முன்கூட்டியே அவர் பேச்சை நிறுத்தி கிளம்பியிருக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் கூறுகிறார்கள்.