கரூர் வேலுசாமிபுரத்தில் நடந்த கூட்டநெரிசல் தொடர்பாக நேரம் வாரியாக என்ன நடந்தது என வீடியோ வெளியிட்டு தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கலந்துகொண்ட பிரச்சாரக் கூட்டத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் கரூரில் என்ன நடந்தது என்று வீடியோ வெளியிட்டு தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் அமுதா ஐஏஎஸ், டேவிட்சன் தேவாசீர்வாதம் ஐபிஎஸ் உள்ளிட்டோர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினர்.
’இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் சில தவறான கருத்துகள் பகிரப்பட்டு வருகிறது. சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகிறது. எனவே நிர்வாக ரீதியாக என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை விளக்கத்தான் இந்த சந்திப்பு’ என கூறினார்.
“விஜய் நாமக்கல்லில் பேசுவதாக சொன்ன நேரம் காலை 8.45, ஆனால் சென்னையில் இருந்தே அவர் 8.45 மணிக்குதான் கிளம்பினார். 20 பேருக்கு ஒரு போலீஸ் என பாதுகாப்பு வழங்கப்பட்டது. போலீசார் தடியடி நடத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.