ADVERTISEMENT

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினிடம் ப.சி. ‘பாஸ்’ செய்த ’அந்த’ மெசேஜ் என்ன? சீண்டும் ராகுல் ‘கோஷ்டி’

Published On:

| By Minnambalam Desk

வைஃபை ஆன் செய்ததும், ’தேர்தல்ன்னு வந்துட்டா யாருக்கும் தூக்கமே வராதுதானே’ என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.

உமக்குதான்யா தூக்கமே வராது.. புது தகவலா சொல்லுமய்யா

ADVERTISEMENT

திமுக கூட்டணியில டிசைன் டிசைனா குடைச்சல் கொடுக்கிற காங்கிரஸ் பத்திதான் சொல்றேன்யா..

ஐவர் குழுன்னு ஒன்னை அமைச்சு சிஎம் ஸ்டாலினுடன் காங்கிரஸ் அதிகாரப்பூர்வமா பேச்சுவார்த்தை நடத்துச்சு.. கூட்டணியே கன்பார்ம் ஆகிடுச்சுன்னுதான் அறிவாலய வாசல்ல நின்னுகிட்டு செல்வபெருந்தகை பேட்டியும் கொடுத்தாரு..

ADVERTISEMENT

அதுல என்னய்யா இப்ப சந்தேகம்?

திமுகதான் கூட்டணி கன்ஃபார்ம்னு நினைக்குது.. ஆனா, காங்கிரஸோ விஜய் கட்சிகிட்ட ரொம்பவே மும்முரமா பேசிகிட்டே இருக்கு..

ADVERTISEMENT

இதுல சிஎம் ஸ்டாலின் கிட்ட ஒன் டூ ஒன் பேசுன மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கொடுத்த பேட்டி திமுகவை ரொம்பவே அப்செட் ஆகிடுச்சு.. அந்த பேட்டியில, ‘கூட்டணியை பத்தியே ஸ்டாலின் இன்னும் எதுவும் சொல்லலை. டிசம்பர் 15-க்குள் சொல்லுங்கன்னு சொன்னோம்.. இன்னும் பதிலே வரலை.. எங்களுக்கு ஆட்சியிலயும் பங்கு வேணும்”எனு பல்டி அடிச்சு பேசியிருந்ததுதான் சிஎம் ஸ்டாலின் உட்பட திமுக சீனியர்களை ரொம்ப கோபப்படுத்தியிருச்சு..

இந்த நிலையிலதான் சீனியர் காங்கிரஸ் தலைவரான ப.சிதம்பரம், சிஎம் ஸ்டாலினை சந்திச்சாரு.. இந்த சந்திப்பை பத்தி அறிவாலய தரப்புல கேட்டப்ப, “காங்கிரஸுல ஏற்கனவே பிரவீன் சக்கரவர்த்தி விஜய்யை நேரில பாத்து பேசுனாரு.. அவர் மேல ஆக்‌ஷனும் எடுக்கலை.. இப்ப எங்க கூட பேசுற பேச்சுவார்த்தை குழு தலைவரே கூட்டணி பத்தியே முடிவு செய்யலைன்னு சொல்றாரு.. டெல்லி என்ன முடிவுலதான் இருக்கு”?ன்னு சிஎம் ஸ்டாலின், ப.சி.கிட்ட கேட்டாரு.. அப்ப, “கார்கேஜி கிட்ட ஏற்கனவே நான் பேசியிருக்கேன்.. அவரைப் பொறுத்தவரை திமுக கூட்டணியைத் தவிர வேற ஆப்ஷனே இல்லைன்னுதான் உறுதியா சொல்றாரு” என ப.சி. சொன்னதுடன் சில நிகழ்வுகளையும் லிஸ்ட் போட்டாரு” என்றனர்.

ஸ்டாலினை சந்திச்சுட்டு வெளியே வந்தப்பவும் ப.சி, கார்கேவை தொடர்பு கொண்டு, சிஎம்கிட்ட பேசுன விஷயங்களை ஷேர் செஞ்சாரு.. அப்பவும் கூட, “நமக்கு திமுகதான் பெஸ்ட் ஆப்ஷன்.. அவங்களை தாண்டி வேற கூட்டணி பத்தி நாம யோசிக்கவே இல்லையே”ன்னு கார்கே திரும்பவும் அதே பல்லவியைத்தான் பாடி இருக்காரு..

ஆனாலும் காங்கிரஸில் ராகுல் காந்திக்கு ரொம்பவே வேண்டியவங்க சிலர், விஜய்கூட கூட்டணிப் பேச்சுவார்த்தையை விடாம நடத்துறதும் அந்த தகவல்களை மீடியா மூலம் பரப்பிவிடுறதுமா இருக்குறாங்க.. இத்தனையையும் பொறுமையா கேண்டில் செய்யுற சிஎம் ஸ்டாலின் எப்ப வேணும்னாலும் திருப்பி அடிப்பாருன்னு அறிவாலய தகவல்கள் சொல்வதாக ஷேர் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டியபடியே ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share