திருநெல்வேலி மாவட்டத்துக்கு அரசு கல்லூரி மகளிர் தங்கும் விடுதி உள்ளிட்ட 3 முக்கியமான அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்டத்துக்காக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட 3 அறிவிப்புகள்
- முதல் அறிவிப்பு – திருநெல்வேலி மாநகர், காந்திநகரில் அமைந்திருக்கக்கூடிய ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில்,
16 கோடி ரூபாய் செலவில், அனைத்து வசதிகளுடன் புதிய மகளிர் தங்கும் விடுதி அமைக்கப்படும். - இரண்டாவது அறிவிப்பு – சேரன்மாதேவி வட்டம் முக்கூடல், பாப்பாக்குடி கிராம விவசாயிகள் பயன்பெறக்கூடிய வகையில், காங்கேயன் கால்வாய் மற்றும் வெள்ளோடையை மேம்படுத்தும் பணிகள் 4 கோடியே 1 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
- மூன்றாவது அறிவிப்பு – நாங்குநேரி மற்றும் இராதாபுரம் வட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, 5 கோடி ரூபாய் செலவில், வள்ளியூர் பெரிய குளம் மற்றும் வள்ளியூரான் கால்வாய் ஆகியவை புனரமைக்கப்படும்
