மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக ஏப். 23, ஏப்.29-ல் தேர்தல்!

Published On:

| By Mathi

West Bengal Assembly Election 2026

மேற்கு வங்க மாநிலத்தில் 294 சட்டசபை தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29-ந் தேதி ஆகிய நாட்களில் வாக்குப் பதிவு நடைபெறும். அனைத்து கட்ட வாக்குகளும் மே 4-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

மேற்கு வங்கத்தில் மொத்தம் 294 தொகுதிகள் உள்ளன. ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் 148

ADVERTISEMENT

முதல் கட்ட வாக்குப்பதிவு (152 தொகுதிகள்): ஏப்ரல் 23

  • வேட்புமனுத் தாக்கல் தொடக்கம்: மார்ச் 30
  • வேட்புமனுத் தாக்கல் கடைசி நாள்: ஏப்ரல் 6
  • வேட்புமனுக்கள் பரிசீலனை: ஏப்ரல் 7
  • வேட்புமனுவைத் திரும்பப் பெற கடைசி நாள்: ஏப்ரல் 9

2-ம் கட்ட வாக்குப்பதிவு (142 தொகுதிகள்): ஏப்ரல் 29

ADVERTISEMENT
  • வேட்புமனுத் தாக்கல் தொடக்கம்: ஏப்ரல் 2
  • வேட்புமனுத் தாக்கல் கடைசி நாள்: ஏப்ரல் 9
  • வேட்புமனுக்கள் பரிசீலனை: ஏப்ரல் 10
  • வேட்புமனுவைத் திரும்பப் பெற கடைசி நாள்: ஏப்ரல் 13
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share