ADVERTISEMENT

பூசணி விதைகள் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?.. இதோ லிஸ்ட்

Published On:

| By Santhosh Raj Saravanan

Weight loss to heart health Pumpkin Seeds Health Benefits

பூசணி விதைகள் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் (Pumpkin Seeds Health Benefits) குறித்து விரிவாக பார்க்கலாம்.

நம் வீட்டு உணவுகளில் பூசணிக்காய் என்பது மிகவும் முக்கியமான பங்கை வகிக்கிறது. குறிப்பாக பூசணிக்காய் சேர்த்து வைக்கும் சாம்பார் மிகுந்த சுவையாக இருக்கும். ஆனால், வீட்டில் பூசணிக் காய் சமைக்கும்போது மக்கள் பெரும்பாலும் அதனை விதைகளை குப்பையில் எறிந்துவிடுகிறார்கள். பூசணி விதைகளை சாப்பிட முடியாது என்றே அவர்கள் நினைக்கிறார்கள்.

ADVERTISEMENT

ஆனால், பூசணி விதைகளில் ஏராளமான ஆரோக்கிய பண்புகள் நிறைந்துள்ளன. இரண்டு வாரங்கள் பூசணி விதைகள் சாப்பிட்டால் அவற்றின் நன்மைகள் தெளிவாகத் தெரியும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

பூசணி விதைகளில் உள்ள நன்மைகள் (Pumpkin Seeds Benefits): பூசணி விதைகள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. இதில் புரதம், நார்ச்சத்து, மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன. பூசணி விதைகளில் உள்ள ஆக்சிஜனேற்றி பண்புகள் ப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்தில் இருந்து உடலை பாதுகாக்கின்றன.

ADVERTISEMENT

செரிமான மண்டலத்தை வலுப்படுத்துகின்றன (Improves Digestive System): பூசணி விதைகள் மலச்சிக்கல், வாயு அல்லது அஜீரண கோளாறுகளை சரிசெய்து நன்மையளிக்கின்றன. பூசணி விதைகளில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தி குடலை சுத்தப்படுத்த உதவுகிறது. 2 வாரங்களுக்கு பூசணி விதைகள் சாப்பிடுவது நம்மை இலகுவாக உணர வைக்கும், செரிமான தன்மை மேம்பட்டுள்ளத்தையும் உணர வைக்கும்.

இதய ஆரோக்கியத்துக்கு நன்மையளிக்கிறது (Heart Health): பூசணி விதைகளில் உள்ள மெக்னீசியம், ஆரோக்கியமான கொழுப்புகள் இதய ஆரோக்கியத்திற்கு நன்மையளிக்கின்றன. இவை கெட்ட கொழுப்புகளை குறைக்கவும், ரத்த அழுத்தத்தை பராமரிக்கவும் உதவுகின்றன. பூசணி விதைகளை தொடர்ந்து எடுத்துக்கொள்வது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

ADVERTISEMENT

எடையை குறைக்க உதவுகிறது (Weight Loss): எடையை குறைக்க முயற்சி செய்பவர்களுக்கு பூசணி விதைகள்  ஆரோக்கியமான சிற்றுண்டியாக இருக்கும். இதில் உள்ள புரதம், நார்ச்சத்து உங்களை நீண்ட நேரம் வயிறு நிறைவாக இருப்பது போல வைத்திருக்க உதவுகிறது. பசி உணர்வை தடுக்கிறது. இதன்மூலம் அதிகம் சாப்பிடுவதை தடுக்க உதவுகிறது.

தூக்கத்தை மேம்படுத்துகிறது (Good Sleep): தூக்கத்தையும் மனநலனையும் மேம்படுத்த பூசணி விதைகளை சாப்பிடலாம். பூசணி விதைகளில் டிரிப்டோபான்கள் உள்ளன. இது நல்ல தூக்கத்தை வர வைக்கிறது. இதில் உள்ள மெக்னீசியம் மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைக்க உதவுகிறது. பூசணி விதைகளில் உள்ள துத்தநாகம், ஆக்சிஜனேற்றிகள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், முடியின் வேர்களை வலுப்படுத்தவும் உதவுகின்றன.

பூசணி விதைகளை எப்படி சாப்பிடுவது? (How do you eat pumpkin seeds?): பூசணி விதைகளை கழுவி, உலர்த்தி, லேசாக வறுத்து தினமும் 1- 2 தேக்கரண்டி வரை சாப்பிடலாம். அதேபோல சாலடுகள், ஸ்மூத்திக்கள் அல்லது தயிரிலும் சேர்த்து பூசணி விதைகளை சாப்பிடலாம். எனினும், பூசணி விதைகளை மிகக் குறைந்த அளவே உட்கொள்ள வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share