தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் இன்று (ஏப்ரல் 28) அதிமுக எம்எல்ஏ ஓ.எஸ்.மணியன் காவல்துறை சார்ந்த அரசு முன்னெடுத்த நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பினார். Weekly holiday for police
இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் , “சில தவிர்க்க முடியாத காரணங்களால் சில சமயங்களில் வார விடுமுறை அளிக்க முடியாமல் போய்விடுகிறது. மற்றபடி வழக்கமான காலங்களில் வார விடுமுறை நடைமுறையில் இருந்து வருகிறது.
தலைமை காவலர்கள் 4.48 லட்சம் நபர்களுக்கு வார விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது”என்று தெரிவித்தார். Weekly holiday for police
மேலும் அவர், “காவலர் சேம நல நிதியின் கீழ் உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கு வழங்கும் நிதியினை 4 லட்சம் ரூபாயிலிருந்து 8 லட்சம் ரூபாயாக உயர்த்தியிருக்கிறோம்.
10 ஆம் வகுப்பு தேர்வில் முதல் 10 ரேங்க்கில் வருகின்ற காவலர்களுடைய பிள்ளைகளுக்கு வழங்கப்படும் கல்வி பரிசுத் தொகை உயர்த்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக, முதல் ரேங்கிற்கு வழங்கப்பட்ட ரூ.6,500/-என்பது ரூ.13,000/- ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது.
இரண்டாம் ரேங்கிற்கு வழங்கப்பட்ட ரூ.4,000/- என்பது ரூ.9,000/- ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. மூன்றாம் ரேங்கிற்கு வழங்கப்பட்ட ரூ.2,500/- என்பது, ரூ.5,000/- ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. நான்காவது முதல் பத்தாவது ரேங்க் வரை இருக்கக் கூடியவர்களுக்கு ரூ.2,000/-லிருந்து ரூ.4,000/- ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. Weekly holiday for police
12 ஆம் வகுப்புத் தேர்வில், முதல் 10 ரேங்கிற்குள் வரக்கூடிய காவலர்களுடைய பிள்ளைகளுக்கு பரிசுத் தொகை உயர்த்தப்பட்டு, குறிப்பாக முதல் ரேங்க் வருகிறவர்களுக்கு ரூ.7,500/-லிருந்து, திமுக ஆட்சியில் ரூ.15,000/- ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது.

இரண்டாம் ரேங்கிற்கு ரூ.6,500/-லிருந்து ரூ.11,000/- ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. மூன்றாம் ரேங்கிற்கு ரூ.3,500/-லிருந்து ரூ.7,000/- ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது.
காவலரோ அல்லது அவர்களது வாரிசோ பணியிலிருக்கும்போது கொல்லப்பட்டால் வழங்கப்படுகின்ற கருணை நிதி 15 லட்சம் ரூபாயிலிருந்து 20 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது.
போலீஸ் இன்சூரன்ஸ் திட்டப்படி பணியில் இருக்கக்கூடிய காவலர் உயிரிழந்தால் வழங்கப்படுகிற 2 லட்சம் ரூபாய் உதவித் தொகை 4 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது.
காவலர் முதல் ஆய்வாளர் வரை 2,249 பேருக்கு சிறைத் தண்டனைகள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.
கருணை அடிப்படையில் 2,592 பேருக்கு வேலை வழங்கப்பட்டிருக்கிறது. காவலர் முதல் ஆய்வாளர் வரை இடர்படி- risk allowance 800 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது.
டிஎஸ்பி மற்றும் கூடுதல் டிஎஸ்பிகளுக்கு 900 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. தலைமைக் காவலர் வரை இருக்கின்றவர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை விடப்பட்டிருக்கிறது. Weekly holiday for policeWeekly holiday for police
காவல் உதவி ஆய்வாளர், சிறப்பு காவல் உதவி ஆய்வாளருக்கு 15 நாட்களுக்கு ஒரு நாள் விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு சிறப்பு போலீஸ்-Tamil Nadu Special Police Battalion-ல் பணிபுரியக்கூடிய அனைத்து காவலர்களுக்கும் weekly off விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது.
இரண்டாம் நிலை காவலர் முதல் ஆய்வாளர் பஸ் பாஸ், ஸ்மார்ட் ஐடி கார்டு வழங்கப்பட்டிருக்கிறது. இப்படி 29 கோடியே 96 லட்சம் ரூபாய் செலவில் காவலர்களுக்கு அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்களையெல்லாம் இன்னும் பட்டியலிட முடியும்.
பெண் காவலர்களுக்கு மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பிய பிறகு, அடுத்த 3 ஆண்டுகளுக்கு விரும்பிய ஊரில் பணியிட மாறுதல் வழங்கப்படுகிறது.
பொது இடங்களில் பணியாற்றும் பெண் காவலர்களுக்கு, நடமாடும் கழிவறை வசதி செய்துதரப்பட்டுள்ளது” என்று கூறினார். Weekly holiday for police