குப்பையை ரோட்டில் வீசுவோருக்கு கோவை மாநகராட்சி எச்சரிக்கை

Published On:

| By Pandeeswari Gurusamy

Warning to those who throw garbage on the road

குப்பைகளை முறையாக அப்புறப்படுத்தாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என கோவை மாநாகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொது இடங்களில் குப்பைகள் கொட்டுவதைக் கட்டுப்படுத்தவும், குப்பைகளை முறையாக அப்புறப்படுத்தவும் கோயம்புத்தூர் மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாகப் பிரித்து வழங்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சூரிய சக்தியில் இயங்கும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அவற்றை ஆர்.எஸ் புரத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கின்றனர்.

ADVERTISEMENT

இதன் அடிப்படையில் திறந்தவெளி குப்பை கொட்டுவோர் யார்? எந்தெந்த பகுதியில் இருந்து வருகின்றனர். அப்பகுதியில் தூய்மை பணியாளர்கள் செல்வதில்லையா ? தொழிலாளர்கள் சென்றாலும் சாலையில் வந்து குப்பையை போடுவது ஏன் ? என கண்காணித்து ஆய்வு நடத்துகின்றனர். பின் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் மூலமாக சம்பந்தப்பட்டோருக்கு அறிவுறுத்தல் வழங்கப்படுகிறது. தொடர்ந்து அதே தவறை செய்தால், அபராதம் விதிக்கப்படும் என்கின்ற எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்படுகிறது.

அந்த வகையில் வ.உ.சி மைதானம் மற்றும் நேரு ஸ்டேடியத்தை சுற்றி உள்ள வணிக வளாக கடைகள் சிலவற்றில் இருந்து வரும் குப்பையை ஓரிடத்தில் சேகரித்து வைக்காததால் பரவி கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ADVERTISEMENT

அந்த நிறுவனத்தினருக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அதில் உங்கள் வணிக நிறுவனத்தின் முன் இரவு நேரங்களில் குப்பை வெளியே சிதறி கிடப்பதற்கு புகைப்படம் மற்றும் காணொளி ஆதாரம் இருக்கிறது. அவற்றை அகற்றி ஒரு பையில் சேகரித்து உங்கள் வளாகத்தில் முன் ஓரத்தில் வைக்க வேண்டும். இதை மீறினால் அபராதம் விதிக்கப்படும் முதல் முறை என்றால் ரூபாய் 500, இரண்டாவது முறை என்றால் ரூபாய் 1500, மூன்றாவது முறை என்றால் ரூபாய் 5,000 வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share