ஒரே இடத்தில் நின்ற விமானம்… விமானியை தேடிய வார்னருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Published On:

| By christopher

warner get shocked in air india

விமானிகளே இல்லாத விமானத்தில் பல மணி நேரம் காக்க வைக்கப்பட்டதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டேவிட் வார்னர் வேதனை தெரிவித்துள்ளார். warner get shocked in air india

கடந்த 15 ஆண்டுகளாக ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடி வந்த டேவிட் வார்னர், 2024 டி20 உலகக் கோப்பையுடன் அனைத்து வடிவிலான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

அடுத்து என்ன செய்யப் போகிறார் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில், தெலுங்கு திரையுலகில் நடிகராக அறிமுகம் ஆக உள்ளதாக தெரிவித்து ஆச்சரியம் அளித்தார்.

ஐதராபாத்தில் வார்னர்

வெங்கி குடுமுலா இயக்கத்தில் நிதின், ஸ்ரீ லீலா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ராபின்ஹூட் என்ற படத்தில் வார்னர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படம் மார்ச் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் ராபின்ஹூட் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்க டேவிட் வார்னர் இன்று அதிகாலை ஐதராபாத் வந்தடைந்தார்.

தெரிந்தும் ஏன் ஏற சொல்கிறீர்கள்? warner get shocked in air india

இதற்கிடையே நேற்று இரவு தனது எக்ஸ் பக்கத்தில் ”விமானியே இல்லாததால் ஏர் இந்தியா விமானத்தில் மணிக்கணக்கில் காக்க வைக்கப்பட்டிருந்தோம். விமானத்தை இயக்க விமானி இல்லை என தெரிந்தும் ஏன் பயணிகளை உள்ளே ஏறச் சொல்கிறீர்கள்?” என காட்டமாக வார்னர் பதிவிட்டிருந்தார்.

இதனையடுத்து, மோசமான வானிலை காரணமாகவே விமானம் தாமதமாக புறப்பட்டதாக வார்னரின் குற்றசாட்டிற்கு ஏர் இந்தியா விளக்கம் அளித்துள்ளது.

அதில், “பெங்களூருவில் இன்றைய சவாலான வானிலை காரணமாக அனைத்து விமானங்களும் திருப்பி அனுப்பப்பட்டதால் தாமதம் ஏற்பட்டது. உங்கள் விமானத்தை இயக்கும் குழுவினர், வேறொரு பணியில் நிறுத்தப்பட்டனர். இதனால் தான் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது” என்று தெரிவித்துள்ளது.

பிஎஸ்எல் தொடரில் வார்னர் warner get shocked in air india

ஐபிஎல் வரலாற்றில் 6000 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள் எடுத்த நான்கு பேட்ஸ்மேன்களில் ஒருவரான வார்னரை, கடந்த ஆண்டு ஜெட்டாவில் நடந்த மெகா ஏலத்தில் எந்த அணியும் எடுக்கவில்லை.

அதேவேளையில் ஏப்ரல் 11 முதல் மே 18 வரை நடைபெற உள்ள பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) 2025 இல் கராச்சி கிங்ஸ் அணிக்காக அவர் விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share