விளாத்திகுளம் மாணவி வழக்கு: சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு பாராட்டு!

Published On:

| By Kavi

விளாத்திகுளம் மாணவி வழக்கில் துரிதமாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு திருநெல்வேலி சரக டிஐ ஜி சரவணன் பாராட்டு சான்றிதழ் வழங்கியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த மார்ச் 10ஆம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

ADVERTISEMENT

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்திய இந்த வழக்கில் கொலையாளியை கண்டுபிடிக்க பத்து தனி படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

சுமார் நூறு சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், சாயல்குடி பகுதியைச் சேர்ந்த தர்ம முனிஸ்வரன், இந்த குற்றத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

ADVERTISEMENT

எட்டு நாட்கள் தீவிர தேர்தல் வேட்டைக்கு பிறகு தர்ம முனீஸ்வரன் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டான். அவனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் காவல்துறையினர் இரவு பகல் பார்க்காமல், குற்றவாளியை கண்டுபிடிக்க கடுமையாக உழைத்தனர் என்று தூத்துக்குடி எஸ் பி மதன் கூறியிருந்தார்.

ADVERTISEMENT

இந்த நிலையில், விளாத்திகுளம் மாணவி வழக்கில் சிறப்பாக செயல்பட்ட 25 காவல்துறை அதிகாரிகளுக்கு திருநெல்வேலி சரக டிஐஜி சரவணன் இன்று பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்துள்ளார்.

விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளர் சக்திவேல், எப்போதும்வென்றான் காவல் நிலைய ஆய்வாளர் உமா மகேஸ்வரி, சங்கரலிங்கபுரம் காவல் நிலைய ஆய்வாளர் அசோக்பாபு, புதூர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஷ், தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் காசிபாண்டியன், முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் ஹரிஹரன், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன், தருவைக்குளம் காவல் நிலைய ஆய்வாளர் சைரஸ், சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் சாந்தி, ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் திலீபன், மாசார்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் பவுல் ஏசுதாசன், காவல் கட்டுப்பாட்டு அறை உதவி ஆய்வாளர்கள் த ராஜபிரபு, மணிமாறன், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி சண்முகம், விளாத்திகுளம் காவல் நிலைய உதவி மாதவராஜா, நாலாட்டின்புதூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுந்தர், சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தபெபின் செல்வ பிரிட்டோ, ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தில்குமார், முறப்பநாடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுப்புராஜ், ஆறுமுகநேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துராஜா, ஆழ்வார்திருநகரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலன், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் காவுராஜன், சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் சுதாகரன், அச்சுதன், மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் ஆகிய 25 பேருக்கு நற்பணிச் சான்றிதழ் வழங்கி பாராட்டியுள்ளார் டிஐஜி சரவணன்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share