விக்ரம் பிரபுவின் ‘லவ் மேரேஜ்’ ட்ரெய்லர் ரிலீஸ்!

Published On:

| By uthay Padagalingam

Love Marriage Movie Trailer 2025

டாம்க்ரூஸ் Love Marriage Movie Trailer 2025

’ப்பா.. என்ன மாதிரியான ஸ்டோரி செலக்‌ஷன்’ என்று சக நாயகர்களே பொறாமைப்படுகிற அளவுக்கு ‘கும்கி’யில் அறிமுகமாகி ‘இவன் வேற மாதிரி’, ‘அரிமா நம்பி’, ‘சிகரம் தொடு’, ‘வெள்ளைக்கார துரை’ என்று தொடர்ச்சியாக வெற்றிப் படங்கள் தந்தவர் விக்ரம் பிரபு. ஆனால், யார் கண் பட்டதோ தெரியவில்லை. அதன்பிறகு அவர் நடித்த படங்கள் எல்லாம் சரியான கவனத்தைப் பெறவில்லை. இத்தனைக்கும் ஏ.எல்.விஜய், ஜி.என்.ஆர் குமரவேலன், கணேஷ் விநாயக், எஸ்.ஆர்.பிரபாகரன் என்று வெற்றிகளைத் தந்த இயக்குனர்களோடு தான் இணைந்தார். Love Marriage Movie Trailer 2025

இடையிடையே 60 வயது மாநிறம், துப்பாக்கி முனை, புலிக்குத்தி பாண்டியில் கவனிக்க வைத்தாலும், இன்னொரு ‘கும்கி’யாக டாணாக்காரன்’ படமே அமைந்தது. அதுவும் ஓடிடி வெளியீடாகிப் போனது. ‘பொன்னியின் செல்வன்’ இரண்டு பாகங்களில் இவருக்குச் சொல்லும்படியாகக் காட்சிகள் அமையவில்லை. பிறகு ‘இறுகப்பற்று’வில் ஓரளவுக்கு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். Love Marriage Movie Trailer 2025

கிட்டத்தட்ட அவற்றைத் தாண்டி நிற்கிற அளவுக்கு ஒரு படமாக அமையும் என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது ‘லவ் மேரேஜ்’ ட்ரெய்லர்.

முப்பதுகளில் திருமண ஏக்கத்தோடு இருக்கிற ஒரு ஆண் மகனை மையப்படுத்துகிறதாம் இப்படத்தின் கதை.

அந்த இளைஞனின் குடும்பத்தினர் பெண் பார்க்க ஒரு வீட்டிற்குச் செல்வதும், அப்பெண்ணின் மீது அவர் காதல் கொள்வதும், அவர்களது கல்யாணத்தில் பிரச்சனை எனும் நிலை உருவானபின்னர் என்னவானது என்றும் சூசகமாகக் கதை சொல்கிறது ‘ட்ரெய்லர்’.

சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், கஜராஜ், அருள்தாஸ், கோடங்கி வடிவேலு, யாசர் ஆகியோருடன் சத்யராஜும் இதிலொரு முக்கியப் பாத்திரத்தில் வந்து போகிறாராம்.

ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்தினை சண்முகப்ரியன் இயக்கியிருக்கிறார். வரும் 27ஆம் தேதியன்று இப்படம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது.

லவ் மேரேஜ்’ ட்ரெய்லர் தந்த நம்பிக்கை திரையில் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்பதுவே விக்ரம் பிரபு ரசிகர்களின் எண்ணம்..

Love Marriage Official Trailer | Vikram Prabhu, Sushmitha Bhat | Sean Roldan
Love Marriage Movie Trailer 2025
Love Marriage Movie Trailer 2025
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share