ADVERTISEMENT

இந்த வாரம் என்ன படம் பார்க்கலாம்..?

Published On:

| By uthay Padagalingam

new movie release in this week june 20

ஜுன் மாதம் பள்ளி, கல்லூரிகள் திறப்பு மற்றும் மாணவர் சேர்க்கைக்கான காலம். அதனால், குடும்ப சகிதம் தியேட்டருக்கு வருபவர்கள் எண்ணிக்கை பெரிதாக இருக்காது என்ற அபிப்ராயம் திரையுலகினர் மத்தியில் உண்டு. ஆனால், சமீப ஆண்டுகளாக அந்த எண்ணம் தகர்க்கப்பட்டு வருகிறது. ஒரு மாதத்தின் மூன்றாம், நான்காம் வாரங்களில் வெளியாகிற படங்கள் கூடச் சில நாட்கள் தாக்கு பிடித்து, அதற்கடுத்த மாதத்தின் ஒன்றாம் தேதியை எட்டி விடுகின்றன. நல்ல வசூலையும் பெறுகின்றன. new movie release in this week june 20

அந்த மாயாஜாலம் இந்த வாரம் நிகழுமா என்ற எதிர்பார்ப்பைத் தாங்கி வருகின்றன சில படங்கள். அவற்றில் பெரும்பாலானவை ஜுன் 20 (நாளை) வெளியாகின்றன.

ADVERTISEMENT

குபேரா

தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சரஃப், தலிப் தஹில், சாயாஜி ஷிண்டே, ஹரீஷ் பேரடி என்று வெவ்வேறு மொழிகள் சார்ந்த நட்சத்திரங்கள் இடம்பெற்றிருக்கிற படம் இது. நாகார்ஜுனா ஜோடியாக சுனைனா நடித்திருக்கிறார். ஏற்கனவே தெலுங்கில் ’கோதாவரி’, ‘ஹேப்பி டேஸ்’, ‘லீடர்’, ‘லைஃப் இஸ் பியூட்டிபுல்’, ‘ஃபிடா’ தந்த சேகர் கம்முலா இதனை இயக்கியிருக்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார்.

பணப்புழக்கம், பொருளாதார முறைகேடுகள் தொடர்பான கேள்விகளை எழுப்பும் படமாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் திரையில் ஓடும் நேரம் 182 நிமிடங்கள்.

ADVERTISEMENT

டிஎன்ஏ

ஒருநாள் கூத்து, மான்ஸ்டர், பர்ஹானா தந்த இயக்குனர் நெல்சன் வெங்கடேஷனின் ஆக்கம் இது. அதர்வா, நிமிஷா சஜயன், பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக், விஜி சந்திரசேகர், சேத்தன், ரித்விகா, போஸ் வெங்கட் உட்படப் பலர் நடித்துள்ளனர். ஐந்து இசையமைப்பாளர்கள் பாடல்களுக்கு இசையமைக்க, பின்னணி இசையைக் கையாண்டிருக்கிறார் ஜிப்ரான். திரையில் ஓடும் நேரம் 140 நிமிடங்கள்.

சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்

ஏகப்பட்ட நடிப்பு கலைஞர்களைத் திரையில் நிறைத்து ‘கிச்சுகிச்சு’ மூட்ட முயற்சிக்கிற வகைமை படமிது. விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேசவ் இயக்கியிருக்கிற இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார். வைபவ், அதுல்யா ரவி உடன் மணிகண்டன் ராஜேஷ், ஆனந்தராஜ், லிவிங்ஸ்டன், மொட்ட ராஜேந்திரன், ஜான் விஜய், சுனில் ரெட்டி, ரெடின் கிங்ஸ்லி, பாலசரவணன், இளவரசு, மறைந்த ஷிஹான் ஹுசைனி உட்படப் பலர் நடித்துள்ளனர். இது திரையில் ஓடுகிற நேரம் 129 நிமிடங்கள்.

ADVERTISEMENT

சித்தாரே ஜமீன் பர்

இப்படத்தில் இந்தி நடிகர் அமீர்கான், ஜெனிலியா நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். மனவளர்ச்சி குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு அணியானது உலகளவிலான கூடைப்பந்து போட்டியொன்றில் பங்கேற்பதாக, இதன் கதை அமைக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கியிருக்கிற இப்படத்தின் பாடல்களுக்கு சங்கர் இஷான் லாய் இசையமைத்துள்ளனர். ராம் சம்பத் இதன் பின்னணி இசையைக் கையாண்டிருக்கிறார். இந்திப் படமான ‘சித்தாரே ஜமீன் பர்’ தமிழ், தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. திரையில் ஓடும் நேரம் 159 நிமிடங்கள்.

யுனைடெட் கிங்டம் ஆஃப் கேரளா

ரஞ்சித் சஜீவ், ஜானி ஆண்டனி, இந்த்ரன்ஸ், மனோஜ் கே ஜெயன், மீரா வாசுதேவன் உள்ளிட்டோருடன் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரனும் இதில் நடித்துள்ளார். ராஜேஷ் முருகேசன் இசையமைத்துள்ள இப்படத்தை அருண் வைகா இயக்கியுள்ளார். இது திரையில் ஓடுகிற நேரம் 131 நிமிடங்கள்.

28 இயர்ஸ் லேட்டர்

’ஸ்லம்டாக் மில்லியனர்’ தந்த இயக்குனர் டேனி ஃபாய்ல் இயக்கியுள்ள ஆங்கிலப் படமிது. ஹாரர் த்ரில்லர் வகைமையில் அமைந்திருக்கும் இப்படத்தில் ஆரோன் டெய்லர் ஜான்சன், ரால்ஃப் பியனெஸ், ஜோடி காமர் நடித்துள்ளனர். இதன் கால அளவு 115 நிமிடங்கள்.

தி புனிஷன் ஸ்கீம்

வெஸ் ஆண்டர்சன் இயக்கியுள்ள இப்படத்தில் பிராட் பிட்டின் ‘பாடி டபுள்’ என்றழைக்கப்படுகிற பெனிசியோ டெல் டோரோ, மியா த்ரெலப்டன், டாம் ஹேங்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இது திரையில் ஓடும் நேரம் 103 நிமிடங்கள்.

எலியோ

இது ஒரு ஆங்கில அனிமேஷன் திரைப்படம். 3டி தொழில்நுட்பத்தில் அமைந்த இப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்படுகிறது.

அட்ரியன் மொலினா இதனை இயக்கியுள்ளார். இதன் கால அளவு 97 நிமிடங்கள்.

இந்த படங்கள் எப்படிப்பட்ட திரையனுபவத்தைத் தந்தன என்பதை இனிவரும் நாட்களில் காணலாம்..!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share