வேலூரில் தவெக நிர்வாகிகளுடன் விஜய் சந்திப்பு.. QR நுழைவு சீட்டு.. 4,900 பேருக்கு அனுமதி.. முதல் முறையாக மேற்கூரை!

Published On:

| By Mathi

Vijay Vellore

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வேலூரில் இன்று பிப்ரவரி 23 தமது கட்சி நிர்வாகிகளை சந்திக்கிறார்.

வேலூர் அகரம்சேரியில் தவெக நிர்வாகிகளை இன்று விஜய் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

இந்த நிகழ்ச்சியில் 4,900 பேர் மட்டுமே பங்கேற்க போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர். இந்த 4,900 பேருக்கும் கியூ ஆர் கோடுடன் கூடிய நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

விஜய் நிகழ்ச்சிகளில் முதல் முறையாக இந்த 33 ஏக்கர் திடலில் தற்போது மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளதாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு பணியில் 900 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share