ஜெயிலர் 2 திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடித்திருப்பதாக நடிகர் விஜய் சேதுபதி கூறியுள்ளார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 2023-ல் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றியைப் பெற்ற ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘ஜெயிலர் 2’ தயாராகி வருகிறது.
இந்த படத்தில் ரஜினி தனது படப்பிடிப்புகளை முடித்துவிட்டார். தொடர்ந்து ஜெயிலர் 2, வரும் 2026 ஜூன் மாதம் 12ஆம் தேதி வெளியாகும் என தெரிவித்து இருந்தார்.
ஜெயிலர் 2வில், ரஜினிகாந்துடன், பாலய்யா, சிவராஜ்குமார், மோகன்லால், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்திருப்பதாக தகவல்கள் வருகின்றன.
அதுபோன்று கோவாவில் நடந்த படபிடிப்பின் போது, ரஜினியுடன் நடிகர் விஜய் சேதுபதியும் கலந்துகொண்டதாக சொல்லப்பட்டது.
இதுதொடர்பாக விஜய் சேதுபதியே தற்போது கூறியுள்ளார். இதுகுறித்து the hollywood reporter india யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த அவர், “ரஜினிகாந்த் மீதுள்ள அபிமானத்தால் தான் இந்தப் படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்தேன். அவருடன் இருப்பதன் மூலம், நான் நிறைய கற்றுக்கொள்ள முடிகிறது. இந்தத் துறையில் பல தசாப்தங்களாக பயணிக்கும் ஒரு சூப்பர் ஸ்டாரிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது” என்று தெரிவித்தார்.
2019-ல் வெளியான ‘பேட்ட’ திரைப்படத்தில் இருவரும் இணைந்து மிரட்டலான காட்சிகளில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“
