கொளத்தூரில் தவெக வேட்பாளர் பெயரை மாற்றி சொல்லி ஓட்டு கேட்ட விஜய்- வீடியோ வைரல்!

Published On:

| By Mathi

Vijay Kolathur Campaign

கொளத்தூர் சட்டசபை தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வேட்பாளர் பெயரை மாற்றிச் சொன்னதால் சலசலப்பு ஏற்பட்டது.

சட்டசபை தேர்தலில் தவெக தனித்து 234 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கொளத்தூரில் முதல்வர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து தவெக வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு அறிவிக்கப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT

இந்நிலையில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் விஜய், இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்தார். வேட்புமனுத் தாக்கல் முடிந்த கையோடு பெரம்பூரில் தமக்கு வாக்கு சேகரித்தார் விஜய்.

இதனைத் தொடர்ந்து கொளத்தூரில் தேர்தல் பிரசாரம் செய்த விஜய், வேட்பாளர் பெயரை பிரபு, பிரபு என சொல்லியே வாக்கு சேகரித்தார். கொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு போட்டியிடும் நிலையில் பக்கத்து தொகுதியான மாதவரத்தில் போட்டியிடும் தவெக வேட்பாளர் பெயரை சொல்லி விஜய் வாக்கு கேட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. விஜய்யின் இந்த பேச்சு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

விஜய் வீடியோ:


ADVERTISEMENT

மேலும் ஒரே நாளில் சென்னையில் பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கத்தில் விஜய் பிரசாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் வில்லிவாக்கம் பிரசாரத்தை விஜய் திடீரென ரத்து செய்துவிட்டார். இதனால் தவெக தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share