தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்தவர்களுக்கு SIR பார்ம் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள். இதை யார் செய்கிறார்கள் என்பதை நான் சொல்லி தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்று அவசியம் இல்லை. இப்போது இருக்கும் ஆட்சியாளர்கள் அவங்களுக்கு கை பாவையாக இருக்கும் சிலபேர் இதை செய்ய ஆரம்பித்துள்ளனர் என நடிகரும், தவெக தலைவருமான விஜய் குற்றம் சாட்டி உள்ளார்.
தவெக SIR பார்ம் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள். இதை யார் செய்கிறார்கள் என்பதை நான் சொல்லி தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்று அவசியம் இல்லை. இப்போது இருக்கும் ஆட்சியாளர்கள் அவங்களுக்கு கை பாவையாக இருக்கும் சிலபேர் இதை செய்ய ஆரம்பித்துள்ளனர் என விஜய் குற்றம் சாட்டி உள்ளார்.
SIR குறித்து 9 நிமிடங்கள் 20 வினாடிகள் வரை விஜய் பேசிய வீடியோ ஒன்று அவரது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில், இந்திய அரசியல் சாசனம் தமிழகத்தில் இருக்கும் எல்லோருக்கும் கொடுத்துள்ள உரிமைகளில் மிகவும் முக்கியமானது வாக்குரிமை. ஒரு மனிதன் உயிருடன் இருப்பதற்கு அடையாளமாக இருப்பதில் அவனது ஓட்டுரிமை மிகவும் முக்கியம்.
தமிழகத்தில் யாருக்குமே வாக்குரிமை இல்லை. என்று சொன்னால் நம்புவீர்களா? நான் பயமுறுத்துகிறேன் என்று நினைக்காதீங்க.. அதுதான் உண்மை. கொஞ்சம் ஏமாந்தால் நம்மை போல லட்சக்கணக்கானபேருக்கு இந்த நிலைமை வரலாம் என்றார். இதற்கு முதன்மையான காரணம் SIR.
