தவெக மாநாட்டில் எடுத்த செல்பியை விஜய் எனது எக்ஸ் பதிவில் வெளியிட்டுள்ளார். பவுன்சர்கள் தொண்டர்களை தூக்கி வீசுவது போன்ற வீடியோவும் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் 2 ஆவது மாநில மாநாடு மதுரை பாரபத்தி பகுதியில் நேற்று (ஆக.21) பிரம்மாண்டமாக நடந்தது. வரும் சட்டமன்ற தேர்தலில் களமிறங்கும் நோக்குடன் நடத்தப்பட்ட இந்த மாநாட்டில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.
மாநாட்டில் பேசிய விஜய் பாஜக, அதிமுக குறித்து பல விமர்சனங்களை முன் வைத்து பேசினார். பின்னர் ஆளும் திமுக அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். முதல்வரை ‘ஸ்டாலின் அங்கிள்’ என்று பேசியது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகி உள்ளது. மாநாட்டு திடல் பகுதியில் நேற்று காலை முதல் கடும் வெயிலில் நின்று கொண்டிருந்த 250க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்தனர். மாநாட்டில் கலந்து கொள்ள வந்த ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்ட நிலையில் 6 தீர்மானங்கள் வெளியிடப்பட்டன. இந்நிலையில் மாநாடு தொடங்கும் முன் மாநாட்டு திடலில் 300 அடி நீளத்தில் அமைக்கப்பட்ட ரேம்ப் மீது நடந்து சென்று விஜய் உற்சாக தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டார். அப்போது விஜய்யை நெருங்கிய தொண்டர்களை பவுன்சர்கள் தடுத்து நிறுத்தினர். அதில் பவுன்சர்கள் தொண்டர்களை குண்டு கட்டாக தூக்கி வீசும் வீடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பி உள்ளது.
இந்நிலையில் ரேம்ப் வாக் சென்ற போது நடிகர் விஜய் எடுத்த செல்பியை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில்
“உங்க விஜய் உங்க விஜய்
உயிரென வர்றேன் நான்
உங்க விஜய் உங்க விஜய்
எளியவன் குரல் நான்
உங்க விஜய் உங்க விஜய்
தனி ஆள் இல்ல கடல் நான் என குறிப்பிட்டு வீடியோவை பகிர்ந்துள்ளார்.