மதுரை பாரபத்தியில் நடைபெற்று வரும் தவெக இரண்டாவது மாநாட்டில் அக்கட்சித் தலைவர் விஜய் பேசி வருகிறார்.
“இந்த மண்ணில் கால் எடுத்து வைத்ததும் ஒரே ஒருவர் தான் நினைவுக்கு வந்தார். சினிமாவிலும் அரசியலிலும் நமக்கு பிடித்தது புரட்சித் தலைவர் எம்ஜிஆர்தான். ஆனால் எம்ஜிஆருடன் பழக எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அவரை போன்ற குணம் கொண்ட என் அண்ணன் புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த்துடன் பழக நிறைய வாய்ப்பு கிடைத்தது.
அவரும் மதுரை மண்ணைச் சேர்ந்தவர்தானே அவரை மறக்க முடியுமா” என்று உருக்கமாக பேசினார்.
தவெக மாநாட்டிலும் விஜயகாந்த் படம் வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக இதுதொடர்பாக கேள்விக்கு பதிலளித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, “ விஜயகாந்த் படத்தை பயன்படுத்துவது பிரச்சனை இல்லை. ஆனால் அக்கட்சி சார்பில் அரசியலில் எங்களுக்கு விஜயகாந்த் தான் மானசீக குரு என தெரிவிக்க வேண்டும். மாநாடு வெற்றி பெற தே.மு.தி.க. சார்பில் வாழ்த்துகள்”என கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
