ADVERTISEMENT

வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டில் முதலீடா? முதல்வர் ஸ்டாலினுக்கு விஜய் கேள்வி!

Published On:

| By Kavi

வெளிநாட்டு முதலீடா அல்லது வெளிநாட்டில் முதலீடா என்று முதல்வர் ஸ்டாலினின் ஜெர்மன், இங்கிலாந்து பயணம் குறித்து தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாகையில் இன்று (செப்டம்பர் 20) பிரச்சாரம் செய்த விஜய், நாகை மக்களுக்கு திமுக அரசு என்ன செய்தது என்று கேள்வி மேல் கேள்வி எழுப்பினார்.

ADVERTISEMENT

தொடர்ந்து அவர், “இவ்வளவு பாரம்பரிய கடல் சார்ந்த ஊரில், அரசு கடல்சார் கல்லூரி கொண்டு வரலாம்… கொண்டு வந்தார்களா? குறைந்தபட்சம் இங்கிருக்கக் கூடிய மக்களுக்காக தொழில் வளத்தையாவது பெருக்கலாம்… அதை செய்தார்களா?

ஆனால் ஒவ்வொருமுறையும் வெளிநாட்டுக்கு சென்று வரும்போதெல்லாம்… அத்தனை கோடி முதலீடு இத்தனை கோடி முதலீடு என்று சி.எம் சிரித்துக்கொண்டே சொல்வார்.

ADVERTISEMENT

சி.எம் சார் மனதை தொட்டு சொல்லுங்கள்… வெளிநாட்டு முதலீடா அல்லது வெளிநாட்டில் முதலீடா… ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்குமான முதலீடா… அல்லது உங்கள் குடும்ப முதலீடு வெளிநாட்டுக்கு போகுதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share