விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. vijay jananayagan release date
கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் கட்சியை ஆரம்பித்த நடிகர் விஜய், இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிக்க உள்ளதாகவும், பின்னர் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் அறிவித்தார்.
அந்தவகையில் தனது கடைசி படமான ’ஜனநாயகன்’ பட வேலையிலும், அரசியலிலும் பிஸியாக இருக்கிறார் விஜய்.
ஜனநாயகன் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைந்து முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை எச். வினோத் இயக்கி வருகிறார்.
இந்நிலையில் ஜனநாயகன் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலையொட்டி ஜனவரி 9 ஆம் தேதி வெள்ளி அன்று வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன் அறிவித்துள்ளது.
“அடியும் உதையும் கலந்து வச்சு விடிய விடிய விருந்து வச்சா” என்ற விஜய்யின் போக்கிரி படத்தின் பாடலை குறிப்பிட்டு, “ஜனநாயகன் பொங்கல்” என்ற கேப்ஷனுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது கேவிஎன் புரொடக்ஷன். vijay jananayagan release date