வைஃபை ஆன் செய்ததும், “ஓவர் டோஸ் உடம்புக்கு ஆகாதுன்னு சொல்வாங்கப்பு” என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.
என்னய்யா யாருக்கு ஓவர் டோஸ்?
தவெகவின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளரான ஆதவ் அர்ஜூனாவுக்குதான்..
அவருதான் தவெக பொதுக்குழுவுல ரொம்ப பேசினாரே?
அதுதான் அவருக்கே வினையாகிடுச்சாம்..
என்னய்யா சொல்றீரு?
தவெக பொதுக்குழுவுல வழக்கத்தை விட, விஜய்யை விட அதிக நேரம் பேசுனவரு ஆதவ் அர்ஜூனா.. அதுவும் கலைஞர் நள்ளிரவு கைது நாளில் ஸ்டாலின் பெங்களூரு போனது பற்றி ஆதவ் பேசியதற்கு திமுக ஆதரவாளர்கள் இடைவிடாம சோசியல் மீடியாவில் பதில் கொடுத்துகிட்டே இருக்காங்க..
ஆதவ் அதிக நேரம் பேசுனது, ஆதவ்வை முன்வைச்சு தவெக மீது கடுமையான விமர்சனங்கள் குவியுறதுன்னு எல்லாத்தையும் விஜய் கவனத்துக்கு கொண்டு போயிருக்கிறாரு அட்வைசர் ஜான் ஆரோக்கியசாமி..
விஜய்யும் இதை எல்லாம் பார்த்துட்டு, கேட்டுகிட்டு ஆதவ்கிட்ட பேசுறதையே நிறுத்திட்டாராம்.. ஆதவ் மேல அவ்வளவு கோபத்துல இருக்கிறாராம் விஜய்.
இதுபற்றி விஜய்க்கு நெருக்கமானவர்கள் நம்மிடம் பேசும் போது, “மதுரை மாநாட்டுல விஜய்யை தவிர வேறு யாரும் பேச வேண்டாம்னுதான் ஜான் சொல்லி இருந்தாரு.. ஆனா ஆதவ் அர்ஜூனா, புஸ்ஸி ஆனந்த், அருண்ராஜ் எல்லாம் சண்டை போட்டுதான் பேசறதுக்கு நேரம் வாங்கினாங்க.. அதுவும் கூட அதிகபட்சம் 6,7 நிமிசம்தான்.. அப்பவும் ஆதவ்தான் அதிகமா பேசுனாரு..
இப்பவும் பொதுக்குழுவுல தளபதியை விட ஆதவ் அதிக நேரம் பேசினாரு.. இதைத்தான் விஜய்கிட்ட ஜான் சுட்டிக்காட்டினாரு.. அதனாலதான் ஆதவ் மீது தளபதிக்கு அப்படி ஒரு கோபம்” என்றனர்.
விஜய்யின் கோபத்தை தெரிந்து கொண்ட ஆதவ் அர்ஜூனாவும், ‘அடுத்து என்ன நடக்குமோ? ஓவரா பேசிட்டோமோ?’ என்ற அச்சத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறாராம் என டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டி விட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.
