சட்டமன்றத் தேர்தலில் முதல்முறையாக போட்டியிடும் விஜய் இன்று (மார்ச் 30) வேட்புமனு தாக்கல் செய்தார்.
வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி வேட்பு மனு தாக்கல் தொடங்கியிருக்கும் நிலையில், பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்க வேட்புமனு தாக்கல் செய்ய வியாசர்பாடியில் உள்ள தேர்தல் அலுவலகத்துக்கு வந்தார் தவெக தலைவர் விஜய்.
அங்கு தேர்தல் அலுவலர் கீதாவிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடன் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தவெக இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர் நிர்மல்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
ஒரு பக்கம் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட செம்பியம் பகுதியில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், அதே நேரத்தில் வியாசர்பாடியில் விஜய் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அங்கிருந்து பிரச்சாரத்தில் ஈடுபட பிரச்சார வாகனத்தில் பெரம்பூர் கிளம்பினார். அவரது வருகை காரணமாக பெரம்பூரில் ஏராளமானோர் குவிந்திருப்பதால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது
